
posted 3rd June 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
புலனாய்வாளர்களால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாக்கப்பட்டார்
அகில இலங்கை தமிழ் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியையும், அவர் மீதான தாக்குதலையும் நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
இன்று மாலை யாழ் வடமராட்சி கிழக்கு பகுதியில் மக்கள் சந்திப்பில் அவர் ஈடுபட்டிருந்த போது அங்கு புலனாய்வாளர்களால் ஆயுத முனையில் அவர் அச்சுறுத்தப்பட்டுள்ளதுடன் அவர் மீது தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச் சம்பவதை நாம் இலங்கை அரசின் ஜனநாயக விரோத செயலாகவே பார்க்கின்றோம்.
நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் இவ்வாறான சம்பவங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காமல் இவற்றை தடுக்க முன்வரவேண்டும். இவ்வாறு தமிழர் பிரதிநிதிகளை அச்சுறுத்தும் அரச புலனாய்வாளர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான தாக்குதலானது ஏனைய அரசியல் தலைவர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் விடுக்கும் அச்சுறுத்தலாகவே நாம் பார்க்கின்றோம்.
சி.வி.கே.சிவஞானம்
அவைத் தலைவர்,
வடக்கு மாகாணசபை,

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)