
posted 2nd June 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
புங்குடுதீவு பாலத்தில் விபத்து
புங்குடுதீவு வாணர் பாலத்தின் ஊடாக பயணித்த உழவு இயந்திரம் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பாலத்தின் ஊடாக உழவு இயந்திரம் பயணித்த போது திடீரென சரிந்து வீழ்ந்து போனமையினாலேயே இவ்வாறு விபத்து இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இப்பாலமானது அறுபது ஆண்டுகளுக்கு மேலாக புணரமைக்கப்படாமல் காணப்படுகின்றது. புங்குடுதீவு மக்களின் நிதியில் அமைக்கப்பட்ட ஐந்து கிலோமீற்றர் நீளமான இக்கடற்பாதையில் பயணிப்பவர்கள் வார்த்தைகளினால் கூறமுடியாதளவுக்கு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். புங்குடுதீவு, நயினாதீவு, நெடுந்தீவுக்கு இப்பாலத்தினூடாகவே ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர் .

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)