
posted 24th June 2023
உறவுகளின் துயர் பகிர -
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் இரத்ததானம்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் பருத்தித்துறை பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலகத்தில் வெள்ளிக் கிழமை ( 22) இரத்ததான நிகழ்வு நடைபெற்றது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கியுடன் இணைந்து இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
பருத்தித்துறை பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் தலைவரும் கிராம அலுவலருமாகிய அரியகுமார் ரதீஸ்கரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறி, உதவி பிரதேச செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் கணக்காளர் உட்பட பிரதேச செயலக ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
இந்தக் குருதிக்கொடை நிகழ்வில் பிரதேச செயலக ஊழியர்கள் 19 பேர் குருதி வழங்கினர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)