
posted 11th June 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்த குழுக்கள்
நாட்டிற்குள் கொவிட் 19 பரவல் மற்றும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சர்கள் குழு மற்றும் நிபுணர் குழுவொன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான அமைச்சர்கள் குழுவில் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் உட்பட 08 பேர் அங்கம் வகிக்கின்றனர்.
நாட்டில் கொவிட் 19 மற்றும் டெங்கு நோயைக் கட்டுபடுத்துவதற்கு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சர் குழு பணிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற 11 பேர் கொண்ட நிபணர் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
மாகாண பிரதம செயலாளர் தலைமையிலான குழுவில் மாகாண கல்வி அமைச்சு , மாகாண கடற்தொழில் அமைச்சின் செயலாளர்கள் மற்றும் மாகாண சுகாதார பணிப்பாளர் பிராந்திய சுகாதார பணிப்பாளர் உள்ளுராட்சி ஆணையாளர்கள் முப்படைகளின் உறுப்பினர்கள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மாகாண பொது சுகாதார பரிசோதர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (13) காலை நிபணர் குழுவை சந்திப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மாகாண பிரதம செயலாளர்களை அழைத்து மாகாண மட்டத்தில் டெங்கு கட்டுப்பாடு செயற்திட்டத்தை தயாரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)