
posted 5th June 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
தியாகி பொன் சிவகுமாரனின் 49ஆவது ஆண்டு நினைவேந்தல்
தியாகி பொன் சிவகுமாரனின் 49ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கள் (05) காலை 9 மணிக்கு உரும்பிராயில் உள்ள அவரது உருவச்சிலைக்கு முன்பாக ஏற்பாட்டு குழுவினரால் நடத்தப்பட்டது.
அன்னாரின் சகோதரி சிவகுமாரி சுடரை ஏற்றி நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார்.
நினைவேந்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா உட்பட தமிழ்க் கட்சிகளின் உறுப்பினர்கள் அரசியல் பேதமின்றி கலந்துகொண்டு பொன் சிவகுமாரனின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர்.
பொன்.சிவகுமாரன் ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராய், பொலிஸாரின் சுற்றிவளைப்பின்போது நஞ்சருந்தி 1974 ஜூன் 5ஆம் திகதி மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)