
posted 20th June 2023
உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள்
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
தியாகிகள் தின சிரமதானம்
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 33 ஆவது தியாகிகள் தின நிகழ்வுகள் வடக்கு, கிழக்கில் ஆரம்பமாகி உணர்வு பூர்வமாக இடம்பெற்று வருகின்றன.
விடுதலைக்காய் உயிரிழந்த போராளிகளையும், பொது மக்களையும் நினைவேந்தும் தியாகிகள் தின அஞ்சலி நிகழ்வையொட்டி பல்வேறு பிரதேங்களிலும் சிரமதான மற்றும் இரத்ததான நிகழ்வுகளும் இடம்பெற்றுவருகின்றன.
இந்த வகையில் கிழக்கிலங்கையின் மண்டூர் 13 ஆம் கொலணி சங்கர் புரம் (13ஏ) முன் பள்ளிப்பாடசாலையில் சிரமதான நிகழ்வு ஒன்று சிறப்புற இடம்பெற்றது.
சங்கர்புரம் முன்பள்ளிப் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், கட்சித் தோழர்கள், பொது மக்கள் எனப் பல்வேறு தரப்பினரதும் பங்குபற்றுதலுடன் வெற்றிகரமாக மேற்படி சிரமதான நிகழ்வு இடம்பெற்றது. பாடசாலை மற்றும் சுற்றுப் புறப்பகுதி விளையாட்டு மைதானம் என்பவற்றில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
தோழர் நளினியின் ஏற்பாட்டில் நடைபெற்ற சிரமதானத்தில் கட்சி மத்திய குழு மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)