
posted 13th June 2023
உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள்
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
தமிழ்ப் பாட வளவாளராக ஜெஸ்மி
கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் தமிழ்ப் பாட ஆசிரிய வளவாளராக ஜெஸ்மி எம். மூஸா நியமிக்கப்பட்டுள்ளார்.
மாகாணக் கல்வித் திணைக்களத்தின் பணிப்புரையின் நிமித்தம் இடம்பெற்ற நேர்முகப் பரீட்சைக்கமைய மாகாணக் கல்விப் பணிப்பாளரால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மருதமுனை அல் - மனார் மத்திய கல்லூரியின்(தே.பா) பழைய மாணவரான ஜெஸ்மி எம்.மூஸா சம்மாந்துறை அல் - மர்ஜான் முஸ்லிம் தேசிய பாடசாலை, அல் - அர்சத் மகா வித்தியாலயம் (தே.பா), மருதமுனை அல் - மனார் மத்திய கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகப் பணியாற்றி தரம் ஒன்றினைப் பூர்த்தி செய்த பட்டதாரி ஆசிரியராவார்.
தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் தமிழ் விஷேட துறையின் மேல் பிரிவில் பட்டம் பெற்ற இவர், தமிழ் முதுகலைமாணியினைப் பூர்த்தி செய்து அதே பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்ட ஆய்வினையும் மேற்கொண்டு வருகின்றார்.
தமிழ் வினாவிடைப் பேழை, நாகம்மாள் ஒரு பார்வை, திருக்குறள் தெளிவுரை அடங்கலாக பாடத்திட்ட நூல்களை வெளியிட்டுள்ளார்
இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் வருகைதரு விரிவுரையாளராக நியமிக்கப்பட்டுள்ள இவர் தமிழ்த்துறை சார்ந்த சர்வதேச மாநாடுகள் பலவற்றில் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ள இவர் இலக்கிய விமர்சகராகவும் ஊடகவியலாளராவும் அறியப்பட்டவர். பன்னூலாசிரியர் எஸ்.எம்.எம். மூஸா, றாஹிலா தம்பதிகளின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரால் வழங்கப்பட்ட இவருக்கான நியமனக் கடிதத்தினை கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். ஸஹதுல் நஜீம் வலயக் கல்வி அலுவலகத்தில் வைத்து ஜெஸ்மி எம் மூஸாவிடம் கையளித்தார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)