
posted 10th June 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
டெங்கு ஒழிப்பு கொத்தணி வேலைத்திட்டம்
மருதமுனை மற்றும் பெரிய நீலாவணை பிரதேசங்களில் டெங்கு ஒழிப்புக்கான கொத்தணி சுத்திகரிப்பு வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நாட்டில் டெங்கு நோய்த் தாக்கம் தீவிரமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு கிழக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலின் பேரில் கல்முனை மாநகர சபையினால் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம் செய்யப்பட்டு, நான்காம் நாள் நிகழ்வாக இச்சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் யூ.எம். இஸ்ஹாக், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களான ஜே.எம். நிஜாமுதீன், ஐ.எல்.எம். இத்ரீஸ், மாநகர சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ மேற்பார்வையாளர் எம். அத்ஹம் மற்றும் வலய மேற்பார்வையாளர்களும் இப்பணிகளை நெறிப்படுத்தியிருந்தனர்.
கொத்தணி வேலைத் திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபையின் 04 வலயங்களுக்குமான திண்மக் கழிவகற்றல் பிரிவின் முழு ஆளணியினரும் வாகனங்களும் மருதமுனை, பெரிய நீலாவணை வலயத்தில் முழுமையாக களமிறக்கப்பட்டு, இவ்வலயத்தின் அனைத்து பகுதிகளிலும் குப்பைகளை சேகரித்து அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)