
posted 20th June 2023
உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள்
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
ஜனரய சுகாதார சேவைகள் சங்கக் கோரிக்கை
அரசாஙகம் கொண்டுவர இருக்கின்ற ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு திட்டத்தில் சுகாதார தொண்டர்களாக பணியாற்றி சிற்றூழியர்களாக நியமிக்கப்பட்டு சில காலத்தின் பின்னர் நிறுத்தப்பட்டவர்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று ஜனரய சுகாதார சேவைகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று (20) செவ்வாய் பிற்பகல் யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
கடந்த காலத்தில் 186 சுகாதார தொண்டர்கள் சுகாதார சிற்றூழியர்களாக உள்வாங்கப்பட்டு அவர்களது நியமனம் ரத்து செய்யப்பட்ட நிலையில் உள்ளதாகவும், இந்நிலையில் அரசாங்கம் ஒரு இலட்சம் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஆட்களை வேலைக்கு உள்வாங்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும், இந்த ஒரு லட்சம் வேலை வாய்ப்பு சுகாதார சிற்றூழியர்களாக நியமிக்கப்பட்டு நிறுத்தப்பட்டவர்களையும் உள்வாங்க வேண்டும் என்றும், இதற்கு வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆவன செய்ய வேண்டும் என்றும் ஜனவரய சுகாதார சேவைகள் சங்கத்தினுடைய பிரதிநிதி முகுந்தன் தெரிவித்துள்ளார்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)