
posted 24th June 2023
உறவுகளின் துயர் பகி
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
கௌரவிக்கும் நிகழ்வு
கல்முனை ஆதரவைத்தியசாலையில் 60 குருதிக்கொடையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம் பெற்றது.
வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி. இரா. முரளீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வைத்தியசாலைக்கு நன்கொடைகள் வழங்கிய 60 கொடையாளர்கள் பாராட்டு நற்சான்றுகளும் நினைவு சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜெ.மதன், வைத்திய நிபுணர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் வைத்தியசாலை குழுவினரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது அம்பாறை மாவட்டம், கல்முனை, துரைவந்திமேடு எனும் கிராமத்தைச் சேர்ந்த ஜனாசுகிர்தன் கிரண்யாஸ்ரீ எனும் நான்கு வயதுச்சிறுமியும் கௌரவிக்கப்பட்டார்.
இவர் மாபெரும் இரண்டு உலக சாதனைகள் படைத்துள்ளார். இவர் தனது இரண்டு கைகளாலும் ஆங்கில எழுத்துக்களை குறுகிய நேரத்தில் எழுதி அவர் படைத்த அவரின் சாதனையை அவரே முறியடித்து 2 உலக சாதனைகளை படைத்துள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)