
posted 29th June 2023
உறவுகளின் துயர் பகிர
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
கொடுப்பனவில் பெயர் நீக்கம் - கெடுபிடியில் அதிகாரிகள்
அரசின் அஸ்வெசும கொடுப்பனவில் பெயர் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேப்பாபிலவு மக்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாகக் கூடி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.
இதன்போது மாவட்ட செயலக நுழைவாயிலில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்கா அதிபர் க. கனகேஸ்வரன் வாசலில் செல்லும்போது அவரை மறித்து தங்கள் ஆதங்கத்தை மக்கள் வெளிப்படுத்தினர்.
அரசின் உதவித் திட்டம் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்ற கருத்தையும், மக்களின் சொந்த காணிகள் இதுவரை விடுவிக்கப்பாடாத நிலையில் அரசின் இந்த உதவித் திட்டமும் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தையும் மக்கள் தெரிவித்தனர்.
மாவட்ட செயலக வாசலை மறித்த மக்களுடன் முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் கலந்துரையாடிய பின்னர் குறிப்பிட்டவர்களை மாவட்ட செயலக மண்டபத்துக்கு அழைத்துச் சென்று தெளிவுபடுத்தினார்.
இதனடிப்படையில் மக்கள் முறையீடுகளை மேற்கொள்ளுமாறும், தாம் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் அளித்த உறுதிமொழியின் அடிப்படையில் போராட்டம் கைவிட்டப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)