
posted 13th June 2023
உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள்
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
குறிப்பிட்ட இடங்களிற்கு மட்டும் புகையூட்டல் முறை இடம்பெறும்
டெங்கு நோய் பரவாதிருக்க முன்னைய காலங்களில் செய்தது போன்று மடு திருப்பதி ஆலய வளாகத்தில் புகையூட்டல் செயல்பாடு இடம்பெறாது. அதற்குப் பதிலாக, நுளம்பு இனம் காணப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என மன்னார் மாவட்ட தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி கதிர்காமநாதன் சுதாகரன் தெரிவித்தார்.
ஆடி மாத மருதமடு அன்னையின் பெருநாளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதார சம்பந்தமாக ஆராயப்பட்டபோது எப்பவும் உள்ள நுளம்புப் பிரச்சினையும் ஆராயப்பட்டது.
வெளிப்பகுதிகளில் புகையூட்டல் முறை இடம்பெறாது என்றும், வதிவிடத்தின் உட்பகுதிக்குத் தேவையேற்படின் புகையூட்டல் இடம்பெற்மெனவும் தெரிவித்தார். மேலும் சுகாதாரத் திணைக்களத்தால் அனைத்து செயல்பாடுகளும் வழமைபோன்று நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)