கிழக்கிலிருந்து பக்தர்கள் கதிர்காமம் நோக்கிப் படையெடுப்பு

உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள்

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கிழக்கிலிருந்து பக்தர்கள் கதிர்காமம் நோக்கிப் படையெடுப்பு

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவத்திற்காக கிழக்கு மாகாணத்தின் பல்வேறு தமிழ்ப் பிரதேசங்களிலிருந்தும் பக்தர்கள் பாதையாத்திரையாக கதிர்காமம் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

கதிர்காமத்திற்கான குமுன தேசிய பூங்கா ஊடான காட்டுப்பாதை கடந்த திங்கட்கிழமை (12) திறந்து வைக்கப்பட்டதையடுத்து பக்தர்கள் பெருமளவில் இக் காட்டுப்பாதையூடாக கதிர்காமம் நோக்கி செல்லத் தொடங்கியுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் உறவினர்கள், குடும்ப உறுப்பினர்களாக பெருமளவு பக்தர்கள் அம்பாறை மாவட்டம் ஊடாக தினமும் பாதயாத்திரையாக பயணிப்பதை அவதானிக்க முடிகின்றது.

இவர்கள் சிறு குழந்தைகளைக் கூட தோழில் சுமந்தவாறு பக்திப் பரவசத்துடன் இப்பாதயாத்திரையை முன்னெடுத்து வருவது விசேட அம்சமாகும்.

குறித்த காட்டுப்பாதை எதிர்வரும் 25 ஆம் திகதி மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இம்முறை சுமார் 45 ஆயிரம் பக்தர்கள் பாதயாத்திரையை மேற்கொள்வவார்களென எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த வருடம் இருந்த நாட்டின் நெருக்கடி நிலையில் 2880 பேர் காட்டுப்பாதையில் கதிர்காமம் நோக்கி பயணித்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கதிர்காமம் முருகன் ஆலயத்தின் வருடாந்த மேற்படி ஆடிவேல்விழா உற்சவம் எதிர்வரும் 19 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஜுலை 04 ஆம் திகதி தீர்த்தோற்சபத்துடன் நிறைவடையவுள்ளது.

இந்த கதிர்காம உற்சேப காலத்தில் அக்கரைப்பற்று, கல்முனை, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு, ஏறாவூர், வாழைச்சேனை இலங்கை போக்கு வரத்து சபை டிப்போக்கள் தினமும் விசேட பஸ் சேவைகளை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

உற்சேவம் இடம்பெறும் நாட்களில் இந்த சேவைகள் நடைபெறும் என தெரியவருகின்றது.

இதேவேளை, கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அனைத்து மதுபானசாலைகளும் 16 நாட்களுக்கு மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க ரு{ஹணு கதிர்காமம் ஆலய எசல திருவிழாவை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள மதுபானக் கடைகளை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஜூன் 19ஆம் திகதி முதல் ஜூலை 4ஆம் திகதி வரை மதுக்கடைகள் மூடப்படவுள்ளன.

இந்தக் காலப்பகுதியில் எசல திருவிழாக் காலத்தில் திருவிழா நடைபெறும் இடத்தை மதுவற்ற பகுதியாக மாற்றுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஊவா மாகாண கலால் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வரலாற்று சிறப்புமிக்க ரு{ஹணு கதிர்காமம் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு வெளியில் இருந்து மதுபானம் மற்றும் போதைப் பொருட்களைக் கொண்டு செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கதிர்காம பகுதியில் இடம்பெறும் போதைப்பொருள் குற்றச் செயல்கள், மதுபான குற்றங்கள் மற்றும் புகையிலை குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளுக்காக 1913 என்ற விசேட தொலைபேசி இலக்கம் 24 மணித்தியாலங்களும் பொதுமக்களுக்காகத் திறந்திருக்கும் என கலால் திணைக்களத்தின் மேலதிக கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

கிழக்கிலிருந்து பக்தர்கள் கதிர்காமம் நோக்கிப் படையெடுப்பு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)