கல்முனை விவகாரத்தில் முரண்பாடான கருத்துக்கள்

உறவுகளின் துயர்பகிர - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கல்முனை விவகாரத்தில் முரண்பாடான கருத்துக்கள்

பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் ஆகியோர் கல்முனை விவகாரத்தில் முரண்பாடான கருத்துக்களை கூறி வருவதானது கட்சிக்கும், சமுகத்துக்கும் ஆரோக்கியமான விடயமல்ல என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பதில் பொருளாளர் ஏ.சி. யஹியாகான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;

கல்முனை எமது மண். அதனை பாதுகாப்பது எமது கடமை. கல்முனை விவகாரம் இன்று நீதிமன்றம் வரை சென்றுள்ளமை உண்மையில் கவலைக்குரிய விடயம். கல்முனைத் தொகுதி எம்.பி. ஹரீஸ் ஒன்றைக் கூற, அதற்கு மாற்றமாக எமது கட்சியின் செயலாளர் நாயகம் இன்னொன்றை கூறுகின்றார்.

முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் அண்மையில் நடைபெற்றபோது கல்முனை விவகாரம் குறித்து நானும், பிரதி மேயர் ரஹ்மத் மன்சூரும் தெளிவான விளக்கங்களை வழங்கினோம். அதற்காக எம்மிருவரையும் ஹரீஸ் எம்.பி.யின் ஏஜெண்டாக நிஸாம் காரியப்பர் விமர்சனம் செய்தார். இது ஒரு அபாண்டமான கருத்தாகும். நாங்கள் எவரது ஏஜெண்டும் கிடையாது. நாங்கள் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள்.

இன்னும் இன்னும் இந்த கல்முனை விவகாரத்தை இழுத்தடித்துக் கொண்டு, மாறி மாறி கருத்து கூறுவதை விட்டுவிட்டு ஹரீஸ் எம்.பியும், நிஸாம் காரியப்பரும் ஒன்றுபட்டு இதற்கு தீர்வு காண முன்வர வேண்டும்.

கல்முனை மக்களும் இந்த விவகாரத்தில் படிப்படியாக பொறுமை இழந்து வருவதை அவதானிக்க முடிகிறது. எனவே, கூடிய விரைவில் மேற்படி இருவரும் பழையவைகளை மறந்து இதற்கான தீர்வை முன்வைக்க வேண்டும். இல்லையேல் கல்முனை மக்கள் இவர்கள் இருவரையும் ஓரம்கட்டுவார்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றும் யஹியாகான் சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்முனை விவகாரத்தில் முரண்பாடான கருத்துக்கள்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)