
posted 26th June 2023
உறவுகளின் துயர் பகிர
உறவுகளின் துயர் பகிர
கஜேந்திரகுமாரின் கண்டனம்
ரணில் விக்கிரமசிங்கவின் செல்வாக்கை சர்வதேச மட்டத்தில் உயர்த்தும் நோக்கில் இனப்பிரச்னைக்கு தீர்வு என்ற கண்துடைப்பு பேச்சுக்கு சென்ற தமிழரசுக் கட்சியினர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர், விக்னேஸ்வரன் ஆகியோரை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
நேற்று (25) ஞாயிறு கொழும்பிலுள்ள அவரின் இல்லத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.
மேலும்,
“தமிழ் மக்களின் இனப்பிரச்னையை தீர்க்கவேண்டும் என்ற குறிக்கோளுடன் தமிழ் கட்சிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேச்சுகளை மேற்கொள்ளவில்லை. பேச்சு ஆரம்பிக்கப்பட்ட போதே ஒற்றையாட்சி என்ற வரையறைக்குள்தான் தீர்வு என்பதை ரணில் கூறினார். எனவே, இங்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை.
சர்வதேச மட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் செல்வாக்கை உயர்த்தும் நோக்கில் இனப்பிரச்னைக்கு தீர்வு என்ற கண்துடைப்பு பேச்சுக்கு சென்ற தமிழரசு கட்சியினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், விக்னேஸ்வரன் அணியினரை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தமிழ் மக்களின் அடையாளங்கள், நாளுக்கு நாள் அழிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு என்று ரணில் அறிவித்த பின்னும் பேச்சில் பங்கேற்று அந்தத் தமிழ் கட்சிகள் மக்களை ஏமாற்றுகின்றன என்றும் கூறினார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)