
posted 23rd June 2023
உறவுகளின் துயர் பகிர
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
ஒன்லைன் மூலம் கடவுச்சீட்டு காத்தான்குடியில்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக் கருவில் உருவான ஒன்லைன் மூலம் மூன்று நாட்களில் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளும் வேலைத்திட்டம் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்துக்கான இவ் வைபவம் காத்தான்குடி பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
குறித்த ஒன்லைன் மூலம் கடவுச்சீட்டினைப் பெறும் நிலையங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி மற்றும் வாழைச்சேனை பிரதேச செயலகங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)