
posted 13th June 2022
கண்ணகி வழிபாட்டிற்கு பிரசித்தி பெற்ற இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயங்களில் வருடாந்த வைகாசி திருக்குளிர்த்தி விழாக்கள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன.
கடந்த இரு வருடகாலமாக கெவிட் - 19 காரணமாக பெருவிழாவாக நடாத்த முடியாமல்போன இந்த திருக்குளிர்த்தி விழாக்கள் குறித்த கண்ணகி அம்மன் ஆலயங்களில் தினமும் பெருமளவு பக்தர்களின் வருகையுடன் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
கடந்த வாரம் ஆரம்பமான இந்த திருக்குளிர்த்தி விழா நாளை 14 ஆம் திகதியுடன் நிறைவுபெறவிருக்கின்றது.
கிழக்கில் காரைதீவு, துறைநீலாவனை, வீரமுனை, மருதடி உட்பட பல்வேறு தமிழ்ப்பிரதேசங்களிலும் அமைந்துள்ள கண்ணகி அம்மன் ஆலயங்களில் இந்த திருக்குளிர்த்தி விழா கடந்த 7 ஆம் திகதி திருக்கதவு திறக்கும் வழிபாடுகளுடன் ஆரம்பமானது. இந்த விழாவின் ஓர் அங்கமாக துறை நீலாவனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற உட்சபத்தின்போது முத்துச்சப்புற ஊர்வலம் மற்றும் தூக்குக் காவடி, பாற்காவடி என்பவை நேற்று வெகுசிறப்பாக நடைபெற்ற அதேவேளை, காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் பெண்கள் மடிப்பிச்சை எடுக்கும் நிகழ்வும் மிக விமர்சையாக இடம்பெற்றது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY