வருடாந்த திருக்குளிர்ச்சி விழா

கிழக்கிலங்கையிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க கண்ணகி அம்மன் ஆலயங்களில் வருடாந்த திருக்குளிர்ச்சி விழாக்கள் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளன.

கடந்த இரு வருடகாலமாக கொவிட் - 19 தீவிரபரவல் நிலமை காரணமாக சோபை இழந்து முடங்கிய இந்த வைகாசி திருக்குளிர்த்தி சடங்குகள், மீண்டும் களைகட்டிய நிலையில் இம்முறை ஆரம்பமாகியுள்ளது.

கிழக்கில் இம்முறை, மேற்படி வருடாந்த திருக்குளிர்ச்சி விழாக்கள் ஆரம்பமாகியுள்ள நிலையில், கண்ணகி அம்மன் ஆலயங்கள் அமைந்துள்ள காரைதீவு, துறைநீவனை, வீரமுரனை பிரதேசங்கள் விழாக்கோலம் பூண்டு, அதிக பக்தர்களின் பங்குபற்றுதலுடன் களைகட்டத் தொடங்கியுள்ளன.

வரலாற்று சிறப்பு மிக்க காரைதீவு அருள் மிகு ஸ்ரீகண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசித் திங்கள் திருக்குளிர்ச்சி விழா திங்கட் கிழமை மாலை கடல் தீர்த்தம் எடுத்து வந்து கல்யாணக்கால் நடலுடன் ஆரம்பமாகியுள்ளது.

இந்த திருக்குளிர்ச்சி விழா சடங்குகள் எதிர்வரும் வைசகாசி 31 ஆம் நாள் அதாவது எதிர்வரும் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை உதயம் 4.30 மணிக்கு திருக்குளிர்ச்சிப் பாடுதலுடன் நிறைவு பெறவுள்ளது.

இந்த திருக்குளிர்ச்சி விழாவையொட்டி காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயவளாகம் உட்பட பிதான வீதியிலும் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன், விழாவை எடுத்தியம்பும் வரவேற்பு தோரணங்களும் அமைக்கப்பட்டு காரைதீவு பெரும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

இதே போன்று கண்ணகி அம்மன் ஆலயங்கள் அமைந்துள்ள வரலாற்றுப் பெருமை மிக்க வீரமுனை அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்த்தி விழா இன்று செவ்வாய்க்கிழமை கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியுள்ள நிலையில், துறை நீலாவணை அருள்மிகு ஸ்ரீகண்ணகை அம்மன் ஆலயத்திலும் செவ்வாய் இரவு திருக்கதவு திறத்தலுடன் ஆலய வருடாந்த திரு விழாவும், திருக்குளிர்திச்சடங்கு விழாவும் ஆரம்பமாகியுள்ளது.

இந்த ஆலயங்களிலும் திருக்குளிர்ச்சி விழாக்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி நிறைவு பெறவுள்ளது.

வருடாந்த திருக்குளிர்ச்சி விழா

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY