வடமராட்சியில் கஞ்சாவுடன் 3 பேர் கைது.

வடமராட்சி திக்கம் பகுதியில் 1kg 900g ம் கஞ்சாவுடன் மூவர் இன்று பிற்பகல் 2:30 மணியளவில் வல்வெட்டித்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

யாழ்ப்பாணம் வடமராட்சி திக்கம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக இராணுவ புலனாய்வு பிரிவிற்க்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இராணுவ புலனாய்வு பிரிவினர் வல்வெட்டித்துறை போலீசாருக்கு தகவல் வழங்கியதன் அடிப்படையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 1kg 900 g கஞ்சா கைப்பற்ற பட்டுள்ளதுடன், திக்கம், தும்பளை,மற்றும் பலாலி அன்ரனிபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரையும் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்துவதற்க்கான நடவடிக்கைகளை வல்வெட்டித்துறை போலீசார் மேற்கொண்டு வருவதுடன் கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதியையும் நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வல்வெட்டித்துறை போலீஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடமராட்சியில் கஞ்சாவுடன் 3 பேர் கைது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)