
posted 18th June 2022
மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் பல காலங்களாக அனுராதபுரம் வைத்தியசாலையில் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டுள்ளது. இது நீதிமன்ற கட்டுக்காவலிலா அல்லது சட்டவைத்திய நிபுணர் வைத்தியரத்தின அவர்களின் கட்டுக்காவலிலா வைக்கப்பட்டுள்ளது என்பது எமக்கு தெளிவு இல்லாத நிலை காணப்படுகின்றது என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணிகள் மன்றில் முன்வைத்துள்ளனர்.
இது தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சார்பாக மாந்தை திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்கில் முன்னிலையாகி வரும் சட்டத்தரனி வீ.எஸ். நிரஞ்சன் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்;
மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்கு வியாழக்கிழமை (16.06.2022) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்ட்டது.
கடந்த தவனை அரச சட்டத்தரணிகளால் சில கருத்துக்கள் முன்வைக்கப்படடிருந்தன.
ஏற்கனவே மன்னார் திருக்கேதீஸ்வர மனித புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இவைகள் எங்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற விபரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.
இவற்றிற்கு இப் புதைகுழியில் அகழ்வு பணிக்கு தலைமை தாங்கியிருந்த சட்டவைத்திய நிபுணர் டீ.எல். வைத்தியரத்தின மற்றும் கேவனகே ஆகியோர் இன்றைய வழக்கில் பிரசன்னமாகி இருந்தனர். அத்துடன் இது சம்பந்தமான பொலிசாரும் அதிகாரிகளும் மன்றில் பிரசன்னமாகி இருந்தனர்.
இந்த வழக்கில் காணாமல் போனோர் மற்றும் பாதிப்படைந்தோர் சார்பில் முன்னிலையாகி இருந்த சட்டத்தரணிகள் பின்வரும் விடயங்கள் மன்றில் முன்வைத்தனர்.
அதாவது, ஏற்கனவே இம் மனித புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் பல காலங்களாக அனுராதபுரம் வைத்தியசாலையில் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டுள்ளது. இது நீதிமன்ற கட்டுக்காவலிலா அல்லது சட்டவைத்திய நிபுணர் வைத்தியரத்தின அவர்களின் கட்டுக்காவலிலா வைக்கப்பட்டுள்ளது என்பது எமக்கு தெளிவு இல்லாத நிலை காணப்படுகின்றது என்றும், அத்தோடு இதற்கு என்ன பரிசோதனை மேற்கொள்ளப் போகின்றீர்கள் என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு தெளிவுப்படுத்தப்பட வேண்டும் என்றும் முன்வைக்கப்பட்டன.
இங்கு இரு தரப்பினராலும் முன் வைக்கப்பட்ட விடயங்களை உன்னிப்பாக கேட்ட மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான், ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட கட்டளைக்கு அமைவாக பொதி செய்யப்பட்ட பொதிகளை அனுராதபுரத்திலிருந்து கொழும்பிலுள்ள 'வொருன்சிக் ஸ்கொரோலிஜீ' என்னும் நிறுவனம் கேவதி அவர்களின் பொறுப்பில் இருப்பதனால் அங்கு கொண்டு சென்று உடற் கூற்று பரிசோதனை செய்து சீ14 பரிசோதனைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதற்கான செலவுகளை வழக்கு தொடருனர்களால் பொறுப்பு எடுக்க வேண்டும் என்றும், அத்துடன் இது ஒரு வெளிப்படுத்தல் தன்மையாக இருக்க வேண்டும் என்ற கட்டளை ஒன்றை ஆக்கியிருக்கின்றது
இது சம்பந்தமாக வைத்திய நிபுணர்கள் எவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்வார்கள் என்பது அவர்களின் மேலதிக அறிக்கையின் மூலம் நீதிமன்றில் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
ஆகவே, இவ் அறிக்கைகளை அடுத்த தவணையில் கோப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடுத்த தவணை 20.07.2022 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இவ் வழக்கில் பாதிப்படைந்தவர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ். ரட்ணவேல் மற்றும் வீ.எஸ். நிரஞ்சனும் காணாமல் போனோர் அலுவலகம் சார்பில் திருமதி பி. புராதினி அவர்களும் மன்றில் ஆஐராகி இருந்தனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY