
posted 6th June 2022
தென்னிந்திய திருச்சபையின் யாழ்ப்பாண ஆதீனத்தின் வட்டுக்கோட்டை பேராலயம் இன்று ஞாயிற்றுக்கிழமை மீள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
400 வருட பழமை கொண்ட இந்தப் பேராலயமானது மீளப் புனரமைக்கபட்ட நிலையில் திருச்சபையின் பேராயர் டானியல் தியாகராஜாவால் காலை 9 மணியளவில் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து விசேட ஆராதனை, வழிபாடுகள் இடம்பெற்றன. இதன்போது, உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள், ஆசியர்களால் விசேட பாடல்களும் பாடப்பட்டன. மேலும், திடப்படுத்தல், ஞானஸ்நானம் , உதவி குருநிலைப்படுத்தல் போன்ற நிகழ்வுகளும் பேராயரின் தலைமையில் இடம்பெற்றன.
இந்த ஆராதனை வழிபாடுகளில் தென்னிந்தியத் திருச்சபையின் மதகுருமார், உடுவில் மகளிர் கல்லூரி ஆசிரியர்கள் மாணவிகள், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி திருச்சபையினர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் எனப் பலர் பங்கேற்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY