
posted 2nd June 2022
மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் எரிபொருள் இன்மையால் தங்கள் தொழிலில் மிகவும் பாதிப்படைந்து இருப்பதன் காரணமாக இதற்கு ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் யாழ் இந்திய துணைத்தூதுவரிடம் இவ் வேண்டுகோளை விடுத்துள்ளார்
தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனது தேர்தல் தொகுதியான மன்னார் மற்றும் முல்லைத்தீவு மீனவர்கள் தொடர்பாக செல்வம் அடைக்கலநாதன் யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதுவர்க்கு புதன்கிழமை (01.06.2022) அனுப்பி உள்ள மடலில்;
எனது தேர்தல் மாவட்டங்களான மன்னார், முல்லைத்தீவு ஆகிய இரு மாவட்டங்களிலும் வாழும் பெரும்பான்மையான மக்கள் தங்கள் ஜீவனோபாய தொழிலாக மீன்பிடி மற்றும் விவசாயம் ஆகிய இரு தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் இதனூடாக தங்களது வாழ்வாதாரத்தை தேவையான வருமானத்தை பெற்று தமது வாழ்க்கையை ஓட்டி வருகின்றார்கள்.
மன்னார் மாவட்டத்தை சேர்ந்த கடற் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு மட்டும் 78 ஆயிரம் லீட்டர் மண்ணெணெயும் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுகின்ற மீனவர்களுக்கு நாளொன்றுக்கு 31 ஆயிரத்து 180 லிட்டர் மண்ணெணெயும் தேவைப்படுகின்றது.
இத் தரவுகள் ஆனது அரச தரவுகளின் அடிப்படையில் மேற்காட்டிய நான் இதை தங்களுக்கு வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்.
இந்த தேவையினை முறையே பெற்று தமது வாழ்வாதாரத்தினை எவ்விதமான தடையும் இன்றி முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலைமை இவ்விரு மாவட்டங்களிலும் காணப்படுவதால் இதற்கு தாங்கள் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அடைக்கலநாதன் யாழ்பாணம் இந்திய துணைத் தூதுவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY