
posted 6th June 2022
மன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளிலுமுள்ள மாற்றாற்றல் கொண்டவர்களுக்கான விளையாட்டு விழா மன்னாரில் சிறப்பாக இடம்பெற்றது.
கடந்த வெள்ளிக்கிழமை (03.06.2022) மன்னார் மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் வே. சிவராஜா தலைமையில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மைதானத்தில் இவ் விழா இடம்பெற்றது.
இவ் விழாவுக்கு பிரதம அதிதியாக மன்னார் அரசாங்க அதிபர் திருமதி அ. ஸ்ரான்லி டீமெல் கலந்து கொண்டார்.
இவ் விளையாட்டு போட்டிகளில் மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு, மடு ஆகிய ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள மாற்றாற்றல் கொண்ட வீரர்கள் வீராங்கனைகள் இவ் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டனர்.
இவ் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய வீரர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் தேசிய மட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களும் இந் நிகழ்வின்போது கௌரவிக்கப்பட்டனர்.
சமூக சேவைகள் திணைக்களம், வொயிஸ் நிறுவனம், வாழவோதயம், மார் மற்றும் மார்டப் ஆகிய நிறுவனங்கள் இவ் விளையாட்டு விழாவுக்கான அனுசரனை வழங்கி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் மாற்று திறனாளிகள் பல்வேறுபட்ட முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரச அதிபர் மேலும் தனது கருத்துக்களை வெளியிடுகையில்;
இன்று எம்மில் பலர் சோம்பேறிகளாக இருக்கும் இவ்வேளையில், மன்னாரில் மாற்று திறனாளிகள் பல்வேறுபட்ட முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு நாம் கைகொடுப்போமாகில் அவர்கள் மேலும் வலுப்பெற்றவர்களாக மாறுவார்கள் என அரச அதிபர் தெரிவித்தார்.
மாற்றாற்றல் உடையவர்களுக்கான விளையாட்டு என்று கூறும்போது ஒரு வித்தியாசமான எதிர்பார்ப்பை எல்லோர் மட்டிலும் ஏற்படுத்தி இருக்கின்றது.
சாதாரண மனிதர்களைவிட இவர்களிடம் ஒரு மாற்று திறன் ஒன்று இருக்கின்றது என்பதே அவர்களின் பெயரில் தாங்கி நிற்கின்றது எனலாம்.
இவர்கள் இன்று தங்களின் விளையாட்டுகளின் மூலம் தங்கள் திறன்களை வெளிப்படுத்துகின்றார்கள்.
ஏற்கனவே தேசிய மட்டத்தில் மன்னார் மாற்று திறனாளிகள் பல சாதனைகள் புரிந்திருக்கின்றார்கள்.
மன்னாரைப் பொறுத்தமட்டில் சாதாரண மனிதர்களைவிட மாற்று திறனாளிகள் அதிகமான மனத்திடனும் பல்வேறு முயற்சிகளோடு அவர்கள் இருப்பதை நாங்கள் அவதானித்துள்ளோம்.
இவர்கள் தனி மனிதனாகவோ அல்லது கூட்டு முயற்சியாகவோ அவர்கள் உற்பத்தி பொருட்களை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இவர்களுடைய இந்த மனப்பலம் இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரு கொடை என்றே கூறவேண்டும்.
இவர்கள் தங்கள் சொந்த காலில் நிற்பதிலே பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இது எமது மாவட்டத்தில் ஒரு பெருமைக்குறிய விடயமாக நாங்கள் பார்க்கின்றோம்.
இங்குள்ள அரசு சார்பற்ற நிறுவனங்கள் இந்த மாற்றாற்றல் உள்ளவர்களை தங்களிலேயே தங்கி நிற்பதற்கு தக்க உதவிகளை செய்து வருகின்றனர்.
இவ்வாறு உதவிகளை செய்வோருக்கு நான் மாவட்டத்தின் சார்பில் நன்றியை நவிழ்ந்து நிற்கின்றேன்.
இந்த மாற்றாற்றல் உள்ளவர்களை கையாளுவோரை நான் பாராட்டி நிற்கின்றேன். இவர்கள் இந்த மாற்றாற்ல் உள்ளவர்களை சமூகத்துடன் இணைக்கும் ஒரு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று எம்மில் பலர் பலவித காரணங்களினால் தாக்கப்பட்டவர்களாக தாமாகவே இயங்கும் நிலையின்றி இருக்கும் இவ்வேளையில் இந்த மாற்று திறனாளிகள் பல்வேறுபட்டு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் முயற்சிகளைப் பார்த்து நாம் வியந்து நிற்கும் வேளையில், அது மற்றவர்களுக்கும் ஒருவிதத்தில் உரமூட்டுகின்றது.
அரசு சார்பற்ற நிறுவனங்களாகிய நாம் இவர்களை இனம் கண்டு உதவிகள் புரிவோமாகில் அவர்கள் மேலும் முன்னேற்றம் அடைய வாய்ப்புக்கள் இருக்கின்றன என தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY