மன்னாரைச் சேர்ந்தவர் கஞ்சாவுடன் மாட்டினார்

கிளிநொச்சி விவேகநந்தாநகர் பகுதியில் 190 கிலோ கேரளக் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

மன்னார் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டார்.

சம்பவம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 6 மணியளவில் இடம்பெற்றது.

குறித்த சந்தேகநபர் மேற்குறித்த பகுதியில் வாடகைக்கு வீடு பெற்று வசித்து வந்துள்ளதாகவும், வியாபார நோக்கத்துக்காகவே மன்னாரிலிருந்து வந்து அங்கு தங்கியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மீட்கப்பட்ட கஞ்சா சுமார் 190 கிலோ எடையுடையது எனவும், அதன் இலங்கை பெறுமதி 5 கோடி ரூபாய் மதிக்கத்தக்கது எனவும் கூறப்படுகிறது.

விசாரணை மேற்கொண்டுவரும் விசேட அதிரடிப்படையினர் சந்தேகநபரையும், கஞ்சா பொதிகளையும், சொகுசுக் காரினையும் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மன்னாரைச் சேர்ந்தவர் கஞ்சாவுடன் மாட்டினார்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY