மண்ணெண்ணை அவலம்

நாட்டில் எரிவாயு சிலிண்டர்களுக்கு பெருந்தட்டுப்பாடும், விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் சமையல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பெரும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாட்டின் பல பிரதேசங்களிலும் மண்ணெண்னை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் பெரும் சிரமங்களுக்குள்ளாகி வருகின்றனர்.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சாய்ந்தமருது பிரதேசத்தில் நிரப்பு நிலையமொன்றில் மண்ணெண்னை விநியோகம் இடம்பெற்றபோது பெருமளவில் மக்கள் திரண்டு நீண்ட கியூ வரிசையில் காத்திருந்து மண்ணெண்ணையை பெற்றுக்கொண்டனர்.

இறைக்கும் கொடும் வெயிலுக்கு மத்தியிலும் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தினை அண்மித்து மிக நீண்ட கியூ வரிசைகள் காணப்பட்டன.

மண்ணெண்னை பெறுவதற்கான கலன்களை கியூ வரிசையில் அடுக்கிவிட்டு அருகிலுள்ள நிழல் தரும் இடங்களில் மக்கள் கூட்டங் கூட்டமாக அமர்ந்திருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

தற்போதைய நிலையில் சமையலுக்காக மண்ணெண்னை அடுப்புகளை பாவிப்பதினிலேயே மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

மண்ணெண்ணை அவலம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)