
posted 8th June 2022
பொது போக்குவரத்தில் மாற்றுத்திறனாளிகளை பிரயாணிகளோ அல்லது போக்குவரத்து நடத்துனர்களோ கவனிக்கப்படாததை கவனத்தில் எடுத்துக் கொண்ட மன்னார் மாவட்டத்தின் தேனீ மாற்றுத்திறனாளிகள் அமைப்பானது தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து பஸ்களில் இவர்களுக்கான ஆசன ஒதுக்கீடுகளுக்கான விழப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு ஒன்றை ஏற்படுத்தினர்.
மன்னார் நகரில் திங்கள் கிழமை (06.06.2022) நடைபெற்ற இந் நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஸ்ரான்லி டிமெல் மற்றும் மேலதிக அதிபர் விழுது அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் தேனீ அமைப்பின் நிர்வாகத்தினர் சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பலரும் இதில் கலந்து கொண்டனர்.
பொது போக்குவரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசன ஒதுக்கீட்டை உறுதிப் படுத்த கோரி விழுது அமைப்பின் அனுசரணையில் தேனீ மாற்றுத்திறனாளிகள் அமைப்பினரால் விசேட விழிப்புணர்வு நிகழ்வு மன்னார் பிரதான பேரூந்து நிலையத்தில் திங்கள் (06.06.2022) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது
இந் நிகழ்வில் அரச மற்றும் தனியார் போக்குவரத்து பேரூந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் பிரத்தயேக ஸ்ரிக்கர் ஒட்டப்பட்டதுடன் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட ஆசனங்கள் அடையாளப் படுத்தப்பட்டன.

மேலதிக செய்திகள்