புதிய பாட நெறிகள் அங்குரார்ப்பண நிகழ்வு

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சாய்ந்தமருது தொழிற் பயிற்சி நிலையத்தில் புதிய கல்வி ஆண்டுகான பாட நெறிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

நிலையப் பொறுப்பதிகாரி எம்.ரி.எம். ஹாரூன் தலைமையில் இடம்பெற்ற இதன் அங்குரார்ப்பண நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிமனையின் நிர்வாக உத்தியோகத்தர் எம். தியாகராஜா பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது குறித்த பாட நெறிகளுக்கு அனுமதி பெற்றுள்ள மாணவர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்ளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. காலத்தை வீணடிக்காமல் உரிய காலப்பகுதிக்குள் அவரவர் இணைந்துள்ள பாட நெறியை மிகவும் ஆர்வத்துடன் சிறப்பாக பூர்த்தி செய்து, சான்றிதழைப் பெற்றுக்கொள்வதில் முனைப்புக்காட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

பொருளாதார நெருக்கடி நிறைந்த இக்காலகட்டத்தில் இப்பயிற்சி நெறிககளை வெற்றிகரமாக பூர்த்தி செய்து, தொழிற் தகைமையை பெற்றுக் கொள்வதன் மூலம் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தொழிற் சந்தையில் நல்ல வருமானத்தை ஈட்டக்கூடிய தொழில் வாய்ப்புகளை இலகுவாக பெற்றுக் கொள்ள முடியுமாக இருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இங்கு ஆங்கிலம், சிங்களம், தகவல், தொழில்நுட்பம், இணையத்தள வடிவமைப்பு, கையடக்க தொலைபேசி திருத்தம் உள்ளிட்ட பாட நெறிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. பகுதி நேரம், முழு நேரம் என வகுப்புகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. இம்முறை இப்பாட நெறிகளைப் பயில்வதற்காக 242 பேர் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர் என நிலையப் பொறுப்பதிகாரி எம்.ரி.எம்.ஹாரூன் தெரிவித்தார்.

புதிய பாட நெறிகள் அங்குரார்ப்பண நிகழ்வு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY