
posted 12th June 2022
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத கட்சிகளின் கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலிதே ரங்கா பண்டாரவை கட்சியின் தலைமையகமான சிறிகோத்தாவில் சந்தித்து நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதற்கான தமது ஆலோசனைகளை முன் வைத்தனர்.
இச்சந்திப்பில் திரு. விஷ்னுகாந்தன், ஜகத் கருணாசேன, இந்திக்க சூரியாராச்சி மற்றும் ஐக்கிய காங்கிரஸ் கட்சித்தலைவர் முபாறக் மஜீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)