பாராளுமன்றம் திருட்டு கும்பல் வசமே இருக்கிறது - சந்திரசேகரன்

பாராளுமன்றம் திருட்டு கும்பல் வசமே இருக்கிறது. அலிபாபாவை கொண்டுவருவதற்கு திருடர்கள் முயற்சி. ஜேவிபி சந்திரசேகரன் குற்றச்சாட்டு.

தற்போதும் நாட்டின் பாராளுமன்றம் திருட்டு கும்பல் வசம் காணப்படுகின்ற நிலையில், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமர் ஆக்குவதற்கு திருடர் கூட்டம் தயாராகி வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் குற்றஞ்சாட்டினார்.

யாழ் கச்சேரி அருகாமையில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் அலிபாவா திருடர்கள் கதை பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

இவர்களின் கதையுடன் ஒத்தவர்களாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலிபாபாவும் அவருடன் சேர்ந்து மக்களின் வரி பணங்களை சுரண்டிய திருடர்கள் மீண்டும் பாராளுமன்றத்தில் மகிந்த ராஜபக்சவை கொண்டுவருவதற்கு முயற்சி செய்து வருகிறார்கள்.

ஏனெனில் 21ஆம் திருத்தம் மூலம் ஜனாதிபதியிடம் இருக்கின்ற அதிகாரங்களை பாராளுமன்றத்துக்கு வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஜனாதிபதியிடம் இருக்கின்ற அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு வழங்கும் போது, பிரதமர் அதிகாரம் கொண்டவராக காணப்படுவார்.

தற்போதிருக்கும் ரணில் விக்கிரமசிங்கவிடம் அதிகாரம் சென்றால் ராஜபக்ஷக்களை பாதுகாப்பார். இல்லாவிட்டால் அவரை பதவி நீக்கம் செய்துவிட்டு ராஜபக்சவின் திருடர்கள் பிரதமராக மஹிந்தவை அரியணையில் அமர்த்துவார்கள்.

மேற்குலகத்தின் செல்லப்பிராணியாகவும் ராஜபக்சக்களின் நண்பராகவும் காணப்படும் ரணில் விக்கிரமசிங்க ஒருபோதும் ராஜபக்சக்களைக் காட்டிக் கொடுக்க மாட்டார்.

மேலும் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு க . ஸ்டாலின் பொருளாதார நெருக்கடியில் வாழும் இலங்கை மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கியிரந்தார்.

ஆனால் அவர் உணவுப் பொதிகளை வழங்கி விட்டு கச்சதீவை மீட்பதற்கு இதுவே தருணம் எனக் கூறியிருப்பது தமிழகம் எமது தொப்புள் கொடி உறவா என்ற கேள்வி எழுகின்றது?

நமது நாட்டின் பொருளாதார பிரச்சினையை சாதகமாக பயன்படுத்தி இந்தியா தனது ஆதிக்கத்தை இலங்கையிலே மேற்கொண்டு வருகின்றமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இலங்கையின் பொருளாதார வளங்களை இந்தியாவும், சீனாவும் போட்டி போட்டு பெற்றுக் கொள்ளும் நிலையில் இலங்கையின் அரிதான பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் இரு நாடுகளின் வசம் சென்றுள்ளது.

சீனாவிடம் நுரைச்சோலை கையளித்தபோது இந்தியாவிடம் சம்பூர் அனல் மின் நிலையத்தை கையளித்தார்கள்.

கொழும்பு போர்ட் சிட்டி துறைமுகத்தை சீனா படங்கள் அளித்தபோது, திருகோணமலை துறைமுகம் அதனை சூழவுள்ள பகுதிகளை இந்தியாக்கு தாரை வார்த்தார்கள்.

அதிவேக நெடுஞ்சாலையை சீனாவுக்கு தாரை வார்த்த போது யாழ் தேவி புகையிரதம் பாதையை இந்தியாக்கு வழங்கினார்கள்.

இவ்வாறு இந்தியாவும் சீனாவும், இலங்கையின் வளங்களையும் வருமான மார்க்கங்களையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளன.

ஆகவே இலங்கைக்கு நிவாரண பொருட்களை வழங்குவதற்கு இந்தியா 13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் போன்ற நிபந்தனைகளை விதித்திருந்தால் உண்மையில் அவர்கள் தொப்புள் கொடி உறவுகள் தான். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்றம் திருட்டு கும்பல் வசமே இருக்கிறது - சந்திரசேகரன்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY