
posted 3rd June 2022
கல்முனை, சாய்ந்தமருது மற்றும் நிந்தவூர் பகுதிகளில் கடந்த இரு வாரங்களுக்குப் பின்னர் மண்ணெண்ணெய் விநியோகம் இடம்பெற்றது. இதன்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிகாலை 4.00 மணி தொடக்கம் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து, மண்ணெண்ணெய் பெற்றுச் செல்வதை அவதானிக்க முடிந்தது.
இதேவேளை சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் அதன் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதால் நாளாந்தம் 600 முதல் 800 மெற்றிக் தொன் மண்ணெண்ணை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இருப்பினும் பிந்திக் கிடைத்த தகவலின்படி மேற்படி சுத்திகரிப்பு நிலையத்தில் மீண்டும் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் இந்த நிலையம் இயங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அறியவருகின்றது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY