
posted 3rd June 2022
நீண்ட நாட்களுக்குப் பின் மன்னார் பேசாலை சதொச விற்பனை நிலையத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை (03.06.2022) பால்மா வருவதாக அறிந்து இப்பகுதி மக்கள் பலர் இரவில் இருந்து இவ் விற்பனை நிலையத்துக்கு முன் காவல் நின்று இந்த பால் மா பக்கெற்றை வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.
காலையில் வந்திறங்கிய பால்மா பாக்கெட் பேசாலை சதோச விற்பனை நிலையத்தில் விற்பனை செய்ய ஆரம்பிக்கப்பட்டது.
அப்பொழுது குடும்ப ரீதியாக வந்து பலர் பொருட்களை வாங்கிக் கொண்டு செல்வதால் ஏனையோர் இப்பொருட்களை பெற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சதோச விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மன்னார் பகுதியில் மண்ணெணெய் கேஸ் இவைகள் வழங்கும்போது சகல குடும்பங்களும் நன்மை பெற வேண்டும் என்ற நோக்குடன் மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் தீர்மானத்திற்கு அமைவாக ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளுக்கும் பிரிவுகளில் உள்ள குடும்பங்களுக்கு விசேட அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன
இவ்வாறு பொருட்களை வழங்கும்போது குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அட்டைகளில் பதிவு செய்து பொருட்களை விநியோகிக்கும்போது பலருக்கும் இது பகிரப்படும் என்ற நோக்கிலேயே இந்த அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டது.
ஆனால் இன்று வெள்ளிக்கிழமை (03.06.2022) பேசாலையில் சதொச விற்பனை நிலையத்தில் வழங்கப்பட்ட பால்மா பாக்கெட் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அட்டையில் பதிவு செய்யாமல் தான்தோன்றித்தனமாக விற்பனை செய்யப்பட்டதால் ஒருசில குடும்பங்கள் நன்மை அடைந்தாலும், பல குடும்பங்கள் பாதிப்பு அடைவதாகவும் மக்கள் புகார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக பேசாலை சதோச விற்பனை முகாமையாளரிடம் வினவியபோது தங்களுக்கு அட்டையில் பதிந்து அத்தியாவசிய பொருட்களை வழங்கும்படி எவ்வித அறிவித்தலும் கிடைக்கவில்லை எனவும், தங்களுக்கு எங்களின் உயர் மட்டத்திலிருந்து இது தொடர்பாக அறிவித்தல் கிடைத்தால் மட்டுமே குடும்ப அட்டையில் பதிந்து இவ்வாறான அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்வோம் என தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY