நாட்டின் விடிவிற்கான இறை பிரார்த்தனை நிகழ்வு

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பிலிருந்து மீட்சி பெறுவதற்காக இஸ்லாமிய முறைப்படியான நோன்பு அனுஷ்டிப்புடன் கூடிய இறை பிரார்த்தனை நிகழ்வு ஒன்று கிழக்கிலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் பக்திபூர்வமாக இடம்பெற்றுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் முக்கிய முஸ்லிம் பிரதேசமான நிந்தவூரில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
ஜம்இய்யத்துல் உலமா சபை நிந்தவூர்க் கிளையின் தஃவாப் பிரிவின் ஏற்பாட்டிலும், கோரிக்கையின் பேரிலும் இந்த இஸ்லாமிய மத ரீதியான பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றது.

நாட்டின் தற்கால சூழ்நிலையான பெரும் பொருளாதார நெருக்கடி மற்றும், இயல்பு வாழ்க்கை பாதிப்பு என்பன இன, மதவேறுபாடுகளுக்கப்பால் அனைத்து மக்களையும் வாட்டிவதைத்து வருகின்றது.

எனவே இந்த சோதனையிலிருந்து மீள்வதற்காக கவனம் இறைவனின் பக்கம் திரும்பவேண்டுமென அறிவுறுத்தியே குறித்த இறைபிரார்தனை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்படி நிந்தவூர் ஜம்இய்யத்துல் உலமா சபைத்தஃவாபிரிவு விடுத்த கோரிக்கையின்படி கடந்த வியாழக்கிழமை நிந்தவூர் மக்கள் நோன்பு அனுஷ்டித்து விஷேட துஆ பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.

அன்றைய தினம் மாலை நிந்தவூர் ஜும்ஆப் பள்ளிவாசலில் பெருந்தெகையான மக்களின் பங்களிப்புடன், நிந்தவூர் ஜம்இய்யதுல் உலமாவின் முன்னாள் செயலாளர் அல்-ஹாஜ் மௌலவி எம்.எஸ். அப்துல் றஷீத் (ஷர்கி) இதற்கான விஷேட துஆ பிரார்த்தனையை செய்தார்.

நிந்தவூர் ஜம்இய்யத்துல் உலமா சபை தஃவாபிரிவின் செயலாளர் மௌலவி ஏ.பி.எம். சிம்லியின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்த பிரார்த்தனை நிகழ்வில் பல்வேறு அமைப்புக்கள் சார்ந்த முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

நாட்டின் விடிவிற்கான இறை பிரார்த்தனை நிகழ்வு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY