
posted 29th June 2022
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் - நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று 29.06.2022 புதன்கிழமை நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
தொடர்ந்தும் 15 தினங்கள் சிறப்புற இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு சப்பறத் திருவிழாவும், 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை இரதோற்சவமும் மறுதினம் புதன்கிழமை காலை தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)