
posted 26th June 2022
வடமராட்சி திக்கம் வடிசாலையை மீண்டும் திறப்பதற்கு பனை அபிவிருத்தி சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
வடக்கு மாகாணத்தில் பனம்பொருள் உற்பத்தித்துறையை ஊக்குவிப்பது தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக, பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் கிருஷாந்த பதிராஜா தெரிவித்துள்ளார்.
மேலும், 'பனம் உற்பத்திப் பொருட்களுக்கு கொழும்பு, கண்டி, மாத்தறை, காலி ஆகிய பிரதேசங்களில் பெரும் சந்தைவாய்ப்புகள் காணப்படுகின்றன. எனவே, பனை உற்பத்திப் பொருட்களை தென் மாகாணத்துக்கு கொண்டு சென்று அங்கு சந்தை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.
கடந்த பலவருடங்களாக மூடப்பட்டுள்ள திக்கம் வடிசாலையை ஜனவரி மாதமளவில் மீண்டும் திறப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். விசேடமாக, திக்கம் வடிசாலையை மீளஆரம்பிப்பதன் ஊடாக, யாழ். மாவட்டத்தில், கள்ளு உற்பத்தியில் ஈடுபடுவர்களிடமிருந்து அதிகளவான கள்ளைப் பெற்றுக்கொள்ள முடியும். வடிசாலை மீள திறக்கப்படுமாயின் நாளொன்றுக்கு 30,000 லீற்றர் கள்ளு தேவைப்படும். இவ்வாறு கள்ளை விலைக்கு பெறுவதன் மூலம் 20 முதல் 27 இலட்சம் ரூபாய் வருமானத்தை கள்ளு உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களால் பெற்றுக்கொள்ள முடியும். இதனூடாக கள்ளு உற்பத்தியில் ஈடுபடுவர்களின் வாழ்வாதாரம் அதிகரிக்கும்.
இந்த தொழிற்சாலையை மீள திறப்பதனூடாக, தொழிற்சாலையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மதுபானத்தை தேசிய ரீதியில் மட்டுமன்றி, ஐரோப்பா நாடுகளுக்கும் அனுப்புவதனூடாக பனை என்ற நாமத்தை சர்வதேச ரீதியில் நிலைநிறுத்த நாம் எதிர்பார்க்கின்றோம்' என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY