தார் வீதியாகப் புனரமைப்பு

மட்டக்களப்பு மாநகரசபையினால் கொக்குவில் எல்லை வீதியினைத் தார் வீதியாகப் புனரமைப்புச் செய்யும் பணிகள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

'எளிர்ச்சிமிகு மாநகரம்' திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகரசபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட கொக்குவில் எல்லை வீதி மற்றும் கொக்குவில் 'ஏ' வலய உபவீதி என்பன தார் வீதியாக மாற்றம் செய்யப்படவுள்ளன.

மட்டக்களப்பு மாநகரசபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு நிதியின் ஊடாக மாநகரசபையின் 3 ஆம் வட்டார உறுப்பினரான க. ரகுநாதனின் முன்மொழிவுக்கமைய 2.5 மில்லியன் செலவில் 400 மீற்றர் நீளம் கொண்டதான இவ்வீதியானது அபிவிருத்தி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாநகரசபையின் நிதி மூலமான வேலைகளை நேரடியாக மாநகர ஆளணி வளங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் திட்டத்தின் அடிப்படையில் குறித்த வீதிகள் அமைக்கப்படவுள்ளன. இதன் மூலமாக நிதி வீண்விரயமாவது தவிர்க்கப்படுவதோடு, மேலதிகமாக ஒரு வீதியினையும் அமைக்க முடியும் என மாநகரசபை முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாநகரசபை முதல்வர் தியாகராஜா சரவணபவன் மற்றும் மாநகரசபை உறுப்பினர்களான க. ரகுநாதன், த.இராஜேந்திரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தார் வீதியாகப் புனரமைப்பு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)