தலைமன்னார் பங்கைச் சேர்ந்த குருவானவானவரின் முதல் திருப்பலி

கடந்த வியாழக்கிழமை (16.06.2022) மன்னார் மறைமாவட்டத்தில் நான்கு அருட்சகோதரர்கள் புதிய குருக்களாக மன்னார் ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையினால் திருநிலைப்படுத்தப்பட்டவர்களில் ஒருவரான தலைமன்னார் புனித லோறன்சியார் ஆலயப் பங்கைச் சேர்ந்த அருட்பணியாளர் கீ.ஜொனார்த்தன் கூஞ்ஞ தனது பங்கில் சனிக்கிழமை (18.06.2022) தனது முதல் நன்றித் திருப்பலியை ஒப்புக்கொடுக்க தலைமன்னாருக்கு வருகை தந்திருந்தபொழுது;

அவருக்கு தலைமன்னார் மக்கள் வரவேற்பு அளிப்பதையும் புதிய குருவானவர் கீ.ஜொனார்த்தன் அடிகளார் தலைமையில் மன்னார் மறைக்கோட்ட முதல்வரும் மன்னார் மறைமாவட்ட மேராலய பரிபாலகருமான ஆர். அகஸ்ரின் புஸ்பராஜ் அடிகளார், நானாட்டான் பங்குத் தந்தை எல். சுரேந்திரன் றெவ்வல் அடிகளார், கீழியன்குடியிருப்பு பங்குத் தந்தை லோறன்ஸ் லியோன், வஞ்சியன்குளம் பங்குதந்தை டீ. அலெக்சாண்டர் சில்வா (பெனோ) அடிகளார், தோட்டவெளி வேதசாட்சிகளின் ஆலய பரிபாலகர் அருட்பணி ஆர்.சி. ரெறன்ஸ் குலாஸ் மற்றும் மாந்தை ஆலய பங்குத்தந்தை அருட்பணி அமல்ராஸ் அடிகளார் ஆகியோர் இணைந்து நன்றித் திருப்பலியை ஒப்பக்கொடுத்தனர்.

தலைமன்னார் பங்குத் தந்தை அருட்பணி எஸ். மாக்கஸ் அடிகளார் இதற்கான சகல ஒழுங்குகளையும் மேற்கொண்டிருந்தார். இப் புதிய குருவானவர் தலைமன்னார் பகுதியில் ஐந்தாவது குருவானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலைமன்னார் பங்கைச் சேர்ந்த குருவானவானவரின் முதல் திருப்பலி

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY