
posted 18th June 2022
மன்னார் திருகோணமலையைச் சேர்ந்த 7 பேர் தமிழகம் சென்றனர்.. தமிழகம் செல்லும் அகதிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 7 பேர் தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்றுற்ளனர்.
மன்னாரில் இருந்து படகு மூலம் இரு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேரே இவ்வாறு அகதிகளாக சென்றுள்ளனர்.
இவ்வாறு சென்ற 7 பேரையும் ஏற்றிச் சென்ற படகு இந்தியாவின் தமிழகம் தனுஷ்கோடி ஒன்றாம் தீடையில் இறக்கிய பின்பு திரும்பிச் சென்றுள்ளனர்.
குறித்த 7 பேரும் திருகோணமலை, மன்னாரைச் சேர்ந்தவர்கள் என அறிய கிடைக்கும் நிலையில், இந்திய கரையோர காவல்படை அவர்களை மீட்டு இராமேஸ்வரம் கொண்டு சென்றுள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY