
posted 24th June 2022

எரிபொருள் நிலையத்தில் அநியாயமாகப் பிரிந்த உயிர்
கறுப்பு சந்தை வியாபாரிகளாலும், அடாவடி கும்பல்களாலும் இன்று ஓர் இளைஞனின் உயிர் அநியாயமாக பறிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மோசடிகளும், மோதல் நிலைகளும் இடம்பெறுகின்றன என்று முறைப்பாடுகள் முன்வைக்கப்படும் சூழலில் இந்த மரணம் அதன் தீவிர நிலையை வெளிப்படுத்தியுள்ளது. இத்தகைய நிகழ்வுகள் எதிர்காலத்தில் நிகழக்கூடாது என்று யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகரில் மணிக்கூட்டு வீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செல்வரத்தினம் பிரசாந்த் என்பவரே இவ்வாறு மரணமானார். இது தொடர்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அத்துடன் உயிரிழந்தவர் தனது ஆதரவாளர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும், ஒத்துழைப்பு தர மறுத்து அடாவடியில் ஈடுபடும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்க அதிபர் பெற்றோலிய கூட்டுத்தாபன பிராந்திய முகாமையாளர், பொலிஸ் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

பங்கீட்டு அடிப்படையில் எரிபொருள் விநியோகம்
யாழ். மாவட்டத்தில் எதிர்வரும் வாரத்திலிருந்து பங்கீட்டு அடிப்படையில் எரிபொருளை விநியோகிப்பதற்காக அமுல்படுத்தப்படவுள்ளது. பொதுமக்களுக்கான எரிபொருள் பங்கீட்டு அட்டை பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.
அரச திணைக்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான எரிபொருள் பங்கீட்டு அட்டை அந்தந்த திணைக்களத் தலைவர்கள் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.
இதுவரை இந்த எரிபொருளுக்கான பங்கீட்டு விநியோக அட்டையை பெற்றுக்கொள்ளாத அரச திணைக்களங்கள் யாழ். மாவட்ட செயலகத்தில் பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவுறுத்தியுள்ளார்.
அதிபர்கள், ஆசிரியர்களுக்கு எரிபொருள் வழங்க விசேட ஏற்பாடு
கிளிநொச்சியில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எரிபொருள் வழங்க விசேட ஏற்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எரிபொருள் வழங்குவது தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
ஞாயிற்றுக்கிழமை (26) குறிப்பிட்ட சில மணித்தியாலயங்களுக்கு மட்டும் இந்த விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி கரைச்சி தெற்கு பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் கரடிப்போக்கு எரிபொருள் நிரப்பு நிலையம், பூநகரி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிலையம் மற்றும் பளை நகரத்தில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஆகியவற்றில் இந்த விசேட ஏற்பாடுகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்கப் பெறுகின்றது. மாவட்ட அரசாங்க அதிபரால் தெரிவுசெய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஆசிரியர்கள் சில மணித்தியாலயங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பெற்றோலைப் பெற்றுக்கொள்ள முடியும்.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பிராந்திய முகாமையாளாருடன் உரையாடியுள்ளோம். அதற்கமைவாக ஞாயிற்றுக் கிழமைக்கு முன்னதாக மேற்படி எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்கின்றபோது ஆசிரியர்கள், அதிபர்களுக்கு பெட்ரோல் விநியோகிப்படும் என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY