
posted 21st June 2022
அம்பாறை மாவட்டத்தின் சில முக்கிய பிரதேசங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றபோதிலும், எரிபொருளுக்காகப் படையெடுக்கும் பொது மக்கள் மத்தியில் அமைதியின்மையும் ஏற்பட்டுள்ளது.
சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒழுங்கின்றி, முறைகேடான முறையிலும், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மக்களைக் காக்க வைத்து, தாம் நினைத்த மாதிரி செயற்படுவதனால் மக்கள் கொதிப்படைந்து இந்த பதட்ட நிலமைகள் ஏற்படத் தொடங்கின.
சம்மாந்துறை, சாய்ந்தமருது, நிந்தவூர், ஒலுவில் போன்ற பிரதேசங்களில் இன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களை அண்மித்து பதட்ட நிலமைகள் ஏற்பட்டதுடன், பின்னர் பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.
மேலும், எரிபொருள் நிரப்பு நிலையத்தினர் தாம் நினைத்தவாறு சர்வாதிகார போக்கில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும், நிலையங்கள் மூடப்பட்ட பின்னர் நள்ளிரவில் கூட தமக்கு வேண்டியவர்களுக்கு எரிபொருள் விநியாகிக்கும் முறைகேடுகள் இடம்பெறுவதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எரிபொருள் நிபரப்பு நிலையங்களில் இடம்பெறும் இத்தகைய விநியோக முறைகேடுகள் தொடர்பில் பொது மக்கள் பிரதேச செயலாளர்களிடம் முறையிட்டுள்ளதுடன், பிரதேச செயலாளர்கள் தலையிட்டு இந்த இக்கட்டான நிலையில் மக்களுக்கு ஒழுங்கு முறைப்படி எரிபொருள் கிடைக்க ஆவன செய்ய வேண்டுமெனவும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
சாய்ந்தமருது, நிந்தவூர் உட்பட சில பிரதேச செயலாளர்கள் மக்களின் கோரிக்கைகளை ஏற்று உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இனியும், எரிபொருள் விநியோகத்தில் சீரான முறை முன்னெடுக்கப்படுமா? அல்லது போர்க்களமாகும் நிலமைதான் தொடருமா என மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY