
posted 29th June 2022
வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட பருத்தித்துறை சமுர்த்தி வங்கி கள உத்தியோகத்தர்களும் தமக்கு பெற்றோல் வழங்க கோரி சுகயீன விடுப்பு போராட்டத்தில் குறித்துள்ளனர்.
வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தில் கிராம சேவகர் உட்பட பலருக்கும் அத்தியாவசிய சேவைக்கென பெற்றோல் வழங்கப்பட்டு வரும் நிலையில் தமக்கு மட்டும் பெற்றோல் வழங்குவதில் புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுவதாக கோரியே இவ்வாறு சுகயீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் சமுர்த்தி பயனாளிகளுக்கான முத்திரை வழங்கல் உட்பட அனைத்து பணிகளும் இன்று தடைப்பட்டுள்ளன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)