
posted 18th June 2022
குருத்துவப் பணியில் ஈடுபடும் நீங்கள் பேச்சு நடத்தை அன்பு நம்பிக்கை தூய்மை இவற்றில் விசுவாசிகளுக்கு முன்மாதிரிகையாகவும், அத்துடன் விசுவாசிகளுக்கு மறை நூலை படித்துக் காட்டுவதும் அறிவுரை வழங்குவதிலும், இரட்சிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.
வியாழக்கிழமை (16.06.2022) மன்னார் மறைமாவட்டத்தில் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நான்கு அருட்சகோதரர்கள் ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையினால் குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட சடங்கின்போது ஆயர் இங்கு தனது மறையுரையில்;
“மக்கள் இனங்களுக்கு உன்னை ஏற்படுத்தினேன்” என இறைவன் தெரிவிக்க, அதற்கு எரேமியா, “ஆண்டவரே எனக்கு பேசத் தெரியாதே சிறு பிள்ளைதானே” என்றார்.
அதற்கு ஆண்டவர் அவரை திடப்படுத்தி, “யாரிடமெல்லாம் உன்னை அனுப்புகின்றேனோ அவர்களிடம் செல். எவற்றை நான் கட்டளையிடுகின்றேனோ அவற்றையெல்லாம் சொல். அவர்கள் முன் அஞ்சாதே! உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கின்றேன்”.
பழைய ஏற்பாட்டில் ஒரு நெருக்கமான உறவில்தான் இறைவாக்கினர் எரேமியா இறைவனுக்காகவும் இறை மக்களுக்காகவும் சிறப்பான பணி புரிந்தார்.
ஆகவே புதிய குருக்களாக இன்று (16.06.2022) அருட்பொழிவு பெறும் நீங்களும் இறைவனுடன் ஆழ்ந்த உறவு கொண்டு உங்கள் செப வாழ்விலும் ஆன்மீகத்திலும் இறை இயேசுவோடு மிக நெருக்கமாக இருந்து மக்களுக்கு மிக அவசியமான பணிகளில் ஈடுபட நான் உங்களை பணிக்கின்றேன்.
புனித பவுல் திமேத்தேயுவுக்கு அவரின் செயல்பாட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றார். பேச்சு, நடத்தை, அன்பு, நம்பிக்கை, தூய்மை இவற்றில் நீங்கள் விசுவாசிகளுக்கு முன் மாதிரிகையாகவும், அத்துடன் விசுவாசிகளுக்கு மறை நூலை படித்துக் காட்டுவதும் அறிவுரை வழங்குவதிலும் இரட்சிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
இவற்றில் எமது குருக்கள் கருத்தாக இருப்பது மிக அவசியமாகும். எந்தவொரு உறவிலும் இறை அன்பும், அவசியமான கட்டுப்பாடுகளும், கண்டிப்புக்களும் இருக்க வேண்டும்.
நாம் அனைவரும் இணைந்து இறை அரசை கட்டி எழுப்ப வேண்டும். இது 2023 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் உலக ஆயர்களின் மாமன்றத்துக்காக தயாரிக்கும் ஒரு பகுதியாக இருக்கின்றது.
நாம் கடந்த காலங்களில் கொரோனா தொற்று நோயினாலும், நாட்டில் ஏற்பட்டிருக்கும் வெவ்வேறு பிரச்சனைகளாலும் பல அசௌரியங்களை ஏற்றுக்கொள்ள நேரிட்டது. இவற்றின் மத்தியிலேயே இந்த நான்கு அருட்சகோதரர்களும் உருவாக்கம் அடைந்துள்ளனர்.
மன்னார் மறைமாவட்டத்தில் மேலும் தேவ அழைத்தல் தேவைப்படுகின்றது என இவ்வாறு ஆயர் தனது மறையுரையில் தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY