காணி கொள்ளையை நிறுத்துவோம் : இனம் மற்றும் மதங்களுக்கிடையிலான முரண்பாடுகளை தடுப்போம்....! பொது அமைப்புக்கள்.

காணி கொள்ளையை நிறுத்துவோம் : இனம் மற்றும் மதங்களுக்கிடையிலான முரண்பாடுகளை தடுப்போம் என வட மாகாண பெண்கள் குரல் உட்பட பல்வேறு அமைப்புக்களை உள்ளடக்கிய அமைப்பு ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதகவது;

இலங்கையானது தற்பொழுது பொருளாதார ரீதியாக பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது. நாட்டு மக்களின் வருமானம் இழக்கப்பட்டு அந்நிய செலாவணி குறைந்து பொருளாதார நெருக்கடி தீவிரமாக்கப்பட்டுள்ளது.

நாட்டுக்கு உணவை வழங்கும் விவசாய, மீனவ, தொழிலாளர் மற்றும் தோட்டப்புற மக்களுக்கு மட்டுமல்லாது, அனைத்து மக்களும் மிகவும் துன்பப்படுகின்றார்கள். மக்களுக்கு மிக முக்கியமான எரிவாயு, எரிபொருட்கள் மற்றும் மருந்து வகைகள் இல்லாமல் வரிசைகளில் நின்று பல்வேறு வகையிலான துன்பங்களுக்கு முகங்கொடுக்கின்ற இந்நிலைமையில் நாட்டின் அதிகாரத்திலுள்ளவர்கள் மேற்கூறப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க வேண்டிய சூழ்நிலையில் அதனை நடைமுறைப்படுத்தாமல் பாதகமான கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றனர்.

இந்நிலைமையில் நாடு என்ற ரீதியில் ஒன்றிணைந்து போராட்டத்தை வெற்றி கொள்ள வேண்டிய சூழநிலைமையில் மக்களை பல்வேறு விதமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி மக்களை பிளவு படுத்துவதற்கு முயற்ச்சி செய்தல் இப்பிரச்சினையை வேறு திசைக்கு கொண்டு சென்று இல்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தி தமது பொறுப்பிலிருந்து விலகுவதற்கான முயற்சியா? என எமக்கு சந்தேகத்தை எழுப்புகின்றது.

அவ்வாறான சூழ்நிலைமைக்குள் தமிழ் மக்கள் அதிகமாக வாழ்கின்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர்மலையில் சிவன் கோயிலொன்று இந்து மக்களின் வழிபாட்டுத் தலமாக இருந்தது. 2018ம் ஆண்டின் பின் தொல்பொருள் ஆய்வு திணைக்கழத்தின் அதிகாரிகளினால் இந்நிலைமையை மாற்றுவதற்காக செயற்பட்டதன் பெறுபேறாக இந்து மக்களின் வழிப்பாட்டுத் தலத்தை பௌத்த மக்களின் வழிபாட்டுத்தலமாக மாற்றுவதற்கு முயற்சி செய்துள்ளனர். இச் செயற்பாட்டுடன் சிங்கள மற்றும் தமிழ் மக்களிடையே தொடர்ச்சியாக முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கு எடுத்த முயற்சியுடன் நீதிமன்றத்தால் இப்பிரதேசத்தில் எதுவித கட்டுமானங்களும் நிர்மாணிக்கப்படக்கூடாது என தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான நிலைமைக்குள் 12.06.2022 ம் திகதி அநுராதபுரம், வெலிஓய மற்றும் கொழும்பு போன்ற பிரதேசங்களிலிருந்து வருகை தந்த சிங்கள மக்கள் உள்ளிட்ட பௌத்த பிக்குகளின் குழுவொன்று புத்தர் சிலையை அமைப்பதற்கு எடுத்த முயற்சியுடன் இந்த நிலைமையானது மீண்டும் தீவிரமாக்கப்பட்டதை நாம் அனைவரும் அறிந்ததே.

இது சிங்களம் மற்றும் தமிழ் மக்களிடையே உள்ள நல்லிணக்கத்தை சிதைப்பதற்காக எடுத்த செயற்பாடாகவே நாம் கருதுகின்றோம். இவ்வாறான நிலைமைகளுக்கு மேலதிகமாக வடக்கில் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் மாதகல், மண்டைதீவு, சுண்டுக்குளம் மற்றும் பளை போன்ற பிரதேசங்களில் பல காணி சுவிகரிப்புகள் நிகழ்ந்துள்ளதோடு, இந்த நிலைமை மக்களின் அமைதியை சீர்குலைப்பதற்கு எடுக்கின்ற முயற்ச்சியாகவே நாம் கருதுகின்றோம்.

யாழ்ப்பாணத்தில் மட்டும் 3000க்கும் மேற்பட்ட 30 வருடங்களுக்கு மேலதிகமாக இன்னும் 10 முகாம்கள் உள்ளிட்ட வேறு பிரதேசங்களில் இடம் பெயர்ந்த சூழ்நிலையில் விவசாயம் மற்றும் மீனவ கைத்தொழிலை தமது வாழ்வாதாரமாக கொண்டவர்களுக்கு அதனை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு முடியாமல் பொருளாதார ரீதியாக நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளதோடு, இவ்வாறாக நிகழுகின்ற காணி சுவீகரிப்புகள் தொடர்ந்து நிகழாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை உகந்த அதிகாரிகள் எடுக்க வேண்டும் என வட மாகாண பெண்கள் குரல் என்ற வகையிலும் அதன் செயற்பாட்டாளர்கள் என்ற ரீதியிலும் கேட்டு கொள்கினறோம்.

அவ்வாறே;

- வட மாகாணத்தில் வாழ்கின்ற மக்களின் வரலாற்று ரீதியான வழிபாட்டு தலங்களை அழிப்பதை நிறுத்துமாறும்,

- பௌத்த மக்களின் மத உரிமைகளுக்கு மதிப்பளிப்பதோடு வடக்கில் வாழுகின்ற இந்து மக்களின் உரிமைகளை பறிப்பதை உடனடியாக நிறுத்துமாறும்,

- தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாக சிங்கள மக்களுக்கு விழிப்பூட்டி இருஇனங்களையும் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கான சூழலை அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும் எனவும்,

- வடக்கு மக்களின் காணிகளை அபிவிருத்தியின் பெயரில் கருத்திட்டங்களின் ஊடாக செல்வந்தர்கள் வசமாக்குவதை நிறுத்துமாறும்,

- காணி சுவிகரிப்புகளை அறிக்கைப்படுத்த சென்ற ஊடகவியலாளர்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபடுகின்ற இளைஞர்களை சித்திரவதை செய்தல், கைது செய்தல் மற்றும் அச்சுறுத்துவதை வன்மையாக கண்டிப்பதோடு,

- வட மாகாணத்தின் குடும்பத்தலைமைத்துவம் மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் கௌரவத்துடனும், நாட்டின் பிரஜைகளாகவும் அனைத்து உரிமைகளுடனும், பாதுகாப்புடனும் வாழ்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அனைத்து அதிகாரிகளிடமும் கேட்கின்றோம்.

இப்படிக்கு உண்மையுள்ள,

வட மாகாணத்தின் பெண்கள் குரல்

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம்- நீர்கொழும்பு
விமுக்தி மீனவ பெண்கள் அமைப்பு – நீர்கொழும்பு
அரும்பு மாவட்ட பெண்கள் அமைப்பு- கிளிநொச ;சி
பூந்தளிர் மாவட்ட பெண்கள் அமைப்பு- யாழ்ப்பாணம்
வளர்பிறை மாவட்ட பெண்கள் அமைப்பு – மன்னார்
தென்றல் மாவட்ட பெண்கள் அமைப்பு- முல்லைத்தீவு
மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கம்- யாழ்ப்பாணம்
மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கம்- முல்லைத்தீவு
மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கம்- கிளிநொச்சி
மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கம்- மன்னார்
கிராமிய உழைப்பாளர் சங்கம்- யாழ்மாவட்டம்
பிரஜைகள் குழுக்கள் (நீகொழும்பு மற்றும் வடமாகாணம்)



Media Statement (சிங்களம்)ஐ வாசிக்கவும்

காணி கொள்ளையை நிறுத்துவோம் : இனம் மற்றும் மதங்களுக்கிடையிலான முரண்பாடுகளை தடுப்போம்....! பொது அமைப்புக்கள்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY