
posted 23rd June 2022
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்று 23 ஆம் திகதி வியாழக்கிழமை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா ஏ-9 வீதி, தபால் திணைக்கள அலுவலகத்துக்கு அருகாமையில் கொட்டகை அமைத்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டமானது 1950ஆவது நாளான இன்று இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியக் கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த தமிழர் தாயகக் காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் செயலாளர் ராஜ்குமார்;
காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளைக் கண்டுபிடிக்கக் கோரி எமது தொடர் போராட்டம் இன்று 1950ஆவது நாளாகும். இந்தப் பந்தலில், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறிய உதவும் வரை எங்களது போராட்டம் தொடரும்.
சுதந்திரம் அடைந்ததில் இருந்து இலங்கை ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் உள்ளது. உணவு இல்லை, எரிபொருள் இல்லை, மருந்து இல்லை மற்றும் பிற அத்தியாவசிய தேவைகள் விநியோகத்தில் குறைவு.
இலங்கை நாளுக்கு நாள் பிழைப்புக்காக போராடிக் கொண்டிருக்கிறது. உலகின் பிற பகுதிகளும் பணவீக்கம், தேவைப்படும் பொருட்களின் பற்றாக்குறை மற்றும் உக்ரைன்-ரஷ்ய போர் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளன.
எதற்கும் நெருக்கடியான சூழ்நிலையில் இலங்கை உள்ளது. இந்த பொருளாதார நெருக்கடி சிங்கள அரசாங்கத்தை பலவீனப்படுத்தி கொள்கிறது.
1957 இலிருந்து சிங்களவர்கள் எமக்கு இழைத்த ஒவ்வொரு அட்டூழியத்தின் அடிப்படையிலும், எமது தாயகத்தில் தமிழர்களின் பிழைப்புக்கும், வாழ்வாதாரத்திற்கும் சிங்களவர்கள் எதிரிகளாக இருந்து வருகின்றனர்.
இப்போது நம் எதிரி பிரச்சனையில் மிகவும் பலவீனமாக இருக்கிறான். அழிந்துவரும் இலங்கையில் இருந்து எங்களை விடுவிக்க இதுவே சிறந்த நேரம்.
நமது தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஒன்றுபட்ட பிரேரணையை முன்வைக்கும் நேரம் இது. எங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க பொதுவாக்கெடுப்பு நடத்தலாம்.
புலம்பெயர் தமிழ் மக்கள், எமது தமிழ் எம்.பி.க்கள் பல நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் பொருளாதார நெருக்கடி முடியும்வரை எங்களை அமைதியாக இருக்குமாறு பயத்துடன் கேட்டுக் கொண்டனர்.
நமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆக்கபூர்வமான சிந்தனை இல்லை என்றும், அரசியல் விடுதலையை விரும்பாதவர்கள் என்றும் இது காட்டுகிறது என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY