கடத்தல் கும்பல்களினின்று உங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றுங்கள் - பொலிஸ் பிரிவு

கடத்தல் கும்பல்களினின்று உங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றுங்கள் - பொலிஸ் பிரிவு

இலங்கை நாட்டில் பல மாவட்டங்களில் ஆள்கடத்தல்களில் ஒருசில குழுக்கள் ஈடுபட்டு வருவதாக தெரிய வருவதால் யாவரும் தங்கள் பிள்ளைகள் மட்டில் மிக எச்சரிக்கையுடன் இருக்கும்படி பொலிசார் எச்சரிக்கை செய்துள்ளனர்.

இலங்கையில் பல மாவட்டங்களில் குறிப்பாக கொழும்பு, கண்டி, குருனாகல், யாழ்ப்பாணம், கம்பஹா, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற பிரதேசங்களில் ஆள்கடத்தும் ஒரு கூட்டம் கடந்த சில நாட்களாக பாடசாலை சிறுவர்களையும் கடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே பிள்ளைகளை கவனமாக கவனித்துக் கொள்ளுமாறு பொலிசார் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.


மீன்பிடித்தொழிலில் மாற்றமா? உடன் பதிவு செய்யுங்கள்

மன்னார் மாவட்டத்தில் பேசாலை மீனவர்கள் அடித்தள மீன்பிடி நடைமுறையிலிருந்து ஏனைய மீன்பிடி நடைமுறைக்கு திரும்பி வருவதால் இவர்களுக்கான சட்டபூர்வ அனுமதி பெறுவதற்காக இதில் ஈடுபடும் மீனவர்கள் தங்கள் சங்கத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு மன்னார் மாவட்ட கடல்தொழில் நீரியல்வள திணைக்களம் பேசாலை மீனவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பேசாலை பகுதி மீனவர்களில் ஒரு சிலர் கடந்த காலங்களில் அனுமதி வழங்கப்படாத தடைசெய்யப்பட்ட அடித்தள மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்மையில் கடற்தொழில் அமைச்சருடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலைத் தொடர்ந்து இவர்கள் இத் தொழிலிருந்து மாற்றம் பெற்று ஏனைய கடற்தொழிலில் ஈடுபடுவதற்கு அனுமதிகோரி உள்ளமையால், இதனடிப்படையில் தொழில் அனுமதியினை பெறுவதற்கு மீனவர்கள் பேசாலை மீனவர் கூட்டுறவு சங்கத்தில் உடனடியாக தமது பதிவினை மேற்கொள்ளும்படியும், அத்துடன் கடற்தொழில் நீரியல்வள திணைக்களத்திடம் தொழில் அனுமதிபத்திரத்துக்கான விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளுமாறு பேசாலை மீனவர்களுக்கு மன்னார் மாவட்ட கடல்தொழில் நீரியல்வள திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடத்தல் கும்பல்களினின்று உங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றுங்கள் - பொலிஸ் பிரிவு

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY