எரிபொருள் வினியோகம் - போராட்டம் - ஓட்டோ சாரதியின் இறப்பு

புலோலியில் வீதியை மறித்து போராட்டம்

பருத்தித்துறை புலோலி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கருகில் மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாலை முதல் மக்கள் எரிபொருளுக்காக காத்திருந்த நிலையில் மதியத்திற்கு பின்பே எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின் மின்துண்டிப்பை காரணம் காட்டியும், கடமை நேரம் முடிந்துவிட்டதாகக் கூறியும் எரிபொருள் விநியோகக்கத்தை இடைநிறுத்தியதால் அதிருப்தியடைந்த மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அழைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.


கிளிநொச்சியில் போராட்டம்
கிளிநொச்சியில் எரிபொருள் வழங்கப்படாததை அடுத்து நேற்று மாலை ஏ-09 வீதியை மறித்து போராட்டமொன்றை முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருளுக்காக காத்திருந்த மக்கள் எரிபொருள் வழங்கப்படாத நிலையில் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்குச் சென்ற கிளிநொச்சி பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.


2.38 லீற்றர் பெற்றோலுக்காக அதிகாலையிலிருந்த காத்திருந்த மக்கள்

யாழ்ப்பாணத்தில் மக்கள் நேற்று, நீண்ட வரிசைகளில் பல மணி நேரமாக காத்திருந்து பெற்றோலை பெற்று சென்றமையை அவதானிக்க முடிந்தது.

சாவகச்சேரி, சுன்னாகம், புலோலி மற்றும் பரமேஸ்வர சந்தி ஆகிய இடங்களில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் விநியோகிக்கப்படும் என பொற்றோலிய கூட்டுத்தாபனம் புதன்கிழமை (15) அறிவித்திருந்தது.

இதனை அடுத்து 16ம் திகதி அதிகாலை 4 மணி தொடக்கம் பெற்றோலை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசைகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருந்தனர்.

பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு கொழும்பில் நேற்று (15) ஏற்றிய பெற்றோல் நேற்றுக் காலையே யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. அதன் பின்னரே விநியோக பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதன்போது , அனைவருக்கும் கிடைக்க பெற்ற பெற்றோலை பகிர்ந்தளிக்கும் முகமாக சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஆயிரம் ரூபாய்க்கே வழங்கப்பட்டது. இதனால் பல மணி நேர காத்திருப்பின் பின்னரும் 2.38 லீற்றர் பெற்றோலையே பெற முடிந்ததாக மக்கள் தெரிவித்தனர்.


பாணந்துறையில் எரிபொருளுக்காகக் காத்திருந்தவர் மரணம்

எரிபொருளுக்காக காத்திருந்தவேளையில் ஓட்டோ சாரதி ஒருவர் நேற்று உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் பாணந்துறை வெகடை பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காத்திருந்த 55 வயது நபரே இவ்வாறு உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் பொருளாதார நெருக்கடியால் வரிசைகளில் காத்திருந்தே மக்கள் எரிபொருள், அத்தியாவசிய பொருட்களை பெறுகின்றனர். இவ்வாறு வரிசைகளில் காத்திருந்த சிலர் அண்மைக்காலத்தில் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY