இந்தியாவின் 65ஆவது சுதந்திர தினத்தன்று யோகா தின நிகழ்வுகள்

யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 65ஆவது சுதந்திர தின ஆசாதிகா அம்ரித் மகோத்சவ் கொண்டாட்டங்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 8ஆவது சர்வதேச யோகா தின நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

யாழ். இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், யாழ் மாநகரசபை முதல்வர் வி. மணிவண்ணன், ஆணையாளர் ஆர். ஜெயசீலன், வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஆர். வரதீஸ்வரன், வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் யாழ்ப்பாண வலய கல்விப் பணிப்பாளர், மற்றும் யாழ்ப்பாண வலயத்திற்குட்பட்ட பாடசாலை அதிபர்கள் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மங்கள விளக்கேற்றலோடு ஆரம்பமாகிய 8 ஆவது சர்வதேச யோகா தின நிகழ்வின் ஆரம்பத்தில் யாழ். இந்திய துணைத்தூதுவரின் வரவேற்புரை இடம்பெற்றதோடு யோகா பயிற்சியும் இடம்பெற்றது.

நிகழ்வின் இறுதியில் யோகா பயிற்சியில் கலந்து கொண்டோருக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்தியாவின் 65ஆவது சுதந்திர தினத்தன்று யோகா தின நிகழ்வுகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY