இ. போ. ச. ஊழியர்களுக்கு எரிபொருள் பெற முன்னுரிமை - கைவிடப்பட்டதா போராட்டம்?
இ. போ. ச. ஊழியர்களுக்கு எரிபொருள் பெற முன்னுரிமை - கைவிடப்பட்டதா போராட்டம்?

இ. போ. ச. ஊழியர்களுக்கு எரிபொருள் பெற முன்னுரிமை - கைவிடப்பட்டதா போராட்டம்?

இலங்கை போக்குவரத்து சபையின் (இ. போ. ச.) வட பிராந்திய ஊழியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பெற்றோலை பெற்றுக் கொடுக்க வடக்கு மாகாண ஆளுநரும் யாழ். மாவட்ட அரச அதிபரும் உறுதியளித்தனர். இதனால், இன்றைய தினம் திங்கள் முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிடத் தீர்மானிக்கப்பட்டது.

“யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள கோண்டாவில், காரைநகர் மற்றும் பருத்தித்துறை சாலை ஊழியர்களுக்கு இன்றைய தினம் பெற்றோல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட செயலாளர் க. மகேசன் உறுதியளித்துள்ளார்.

எனினும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட சாலைகளின் ஊழியர்களுக்கு புதன்கிழமை பெற்றோல் வழங்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா உறுதியளித்துள்ளார். ஊழியர்களின் விவரம் இன்று மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்படும்” என்று வட பிராந்திய போக்குவரத்துச் சபையின் தலைமை பிராந்திய முகாமையாளர் எஸ். குலபாலசெல்வம் தெரிவித்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளரின் உறுதிமொழி தொழிற்சங்கங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. அவர்கள் சேவையில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.


அதிகாரிகளால் பழிவாங்கப்படு எரிபொருள் நிலையம்

கல்வியங்காட்டில் அமைந்துள்ள நல்லூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன பிராந்திய அதிகாரிகளால் பழிவாங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு கடந்த 3 வாரங்களாக எரிபொருள் வழங்கப்படவில்லை என்று அறிய வருகின்றது.

எரிபொருளுக்கு நெருக்கடி இடம்பெற்று வரும் நிலையில், பெற்றோலிய கூட்டுத்தாபன பிராந்திய உயர் அதிகாரிகள் சிலர் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் விரோதமாக எரிபொருளைப் பெற்று வருகின்றனர் என்று கூறப்படுகின்றது.

நல்லூர் பல நோக்கு கூட்டுறவு சங்க அதிகாரிகள் இந்த விரோத எரிபொருள் வழங்கலுக்கு உடன்பட மறுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து கடந்த 20 நாட்களாக அந்த எரிபொருள் நிலையத்துக்கு எரிபொருள் அனுப்பப்படவில்லை.

மக்கள் நெரிசலாக வாழும் கல்வியங்காட்டில் இரு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உள்ளன. ஒன்று நல்லூர் பல நோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமானது. மற்றையது தனியாருக்கு சொந்தமானது. தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு சில நாட்களுக்கு ஒருமுறையேனும் எரிபொருள் வழங்கப்படுகின்றது. ஆனால், கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான நிலையத்துக்கு எரிபொருள் வழங்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகின்றது.

எனினும், இரு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் தினமும் எரிபொருளுக்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறிருப்பினும், கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு திட்டமிட்டு எரிபொருள் வழங்காமல் புறக்கணிக்கப்படுவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இது விடயத்தில் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது.



பரந்தன் - பூநகரி வீதிக்கு ஒதுக்கப்பட்ட நிதி அரசியல்வாதின் பொக்கற்றுக்குளா?

பரந்தன் - பூநகரி வீதி போடப்பட்டு எத்தனை ஆண்டுகள் சென்றிருக்கும். எட்டு ஆண்டுகளாகி இருக்குமா? அந்த வீதிக்கு என்ன நடந்தது? - வீதிக்காக ஒதுக்கப்பட்ட நிதி அரசியல்வாதியின் பொக்கெற்றுக்குள் காணப்படுகின்றது என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸநாயக்க கேள்வி எழுப்பினார்.

யாழ்ப்பாணம் வந்துள்ள அவர் தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

“பரந்தனில் இருந்து பூநகரி ஊடாக நான் யாழ்ப்பாணம் வந்தேன். அந்த வீதி போடப்பட்டு எத்தனை ஆண்டுகள் சென்றிருக்கும். எட்டு ஆண்டுகளாகி இருக்குமா? அந்த வீதிக்கு என்ன நடந்தது? சாதாரணமாக அத்தகைய வீதிக்கு 20 வருடங்களாவது உத்தரவாதம் இருக்கும். ஆனால், சில வருடங்களிலேயே அந்த வீதியால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வீதிக்காக ஒதுக்கப்பட்ட நிதி அரசியல்வாதியின் பொக்கெற்றுக்குள் காணப்படுகின்றது. இதுதான் எமது நாட்டின் அபிவிருத்தி. விமானம் ஓடாத விமான நிலையம், கப்பல்கள் வராத துறைமுகம், கிரிக்கெட் விளையாடாத மைதானம், கூட்டங்கள் இடம்பெறாத மண்டபங்கள் என்பனவே தற்போது காணப்படுகின்றன. இது மக்களுக்கான அபிவிருத்தி அல்ல. இது ஊழல்வாதிகள் கொள்ளை அடிப்பதற்கான வழி. தற்போது எமது நாட்டின் பொருளாதாரப் பிரச்னைக்கு மிக முக்கிய காரணம் ஊழலும் துஷ்பிரயோகமுமே - என்றார்.

இ. போ. ச. ஊழியர்களுக்கு எரிபொருள் பெற முன்னுரிமை - கைவிடப்பட்டதா போராட்டம்?

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY