
posted 20th June 2022
மக்கள் வறுமையில் வாடுவதற்கு அரசே முழுப்பொறுப்பேற்க வேண்டு:ம் இவ்வாறு முன்னாள் ழக்குமாகாணசபை உறுப்பினர், (ஈ.பி.ஆர்.எல்.எப் (ப.ம) மட்டக்களப்பு) இரா.துரைரெத்தினம் விடுத்துள்ள அறிக்கையொன்றின் தெரிவித்துள்ளார்.
இந்த ஊடக அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
அரசின் செயற்பாடு காரணமாக முழு நாடும், முழு மாவட்டமும், ஸ்தம்பித நிலை அடைந்து மாவட்டத்தை விட்டு, நாட்டை விட்டு வெளிநாடுகள் செல்வதற்கு மக்கள் நிற்பந்திக்கப்பட்டுள்ளனர். இயற்கை வளமான நீர் நிலைகள், கால்நடைகள், குடியிருப்புப் பகுதிகள் இயற்கையான சுற்றுச் சூழல் உள்ளதன் காரணமாக இன்று மக்கள் ஒரளவிற்கு சமாளித்து வருகின்றனர். இவை இப்படி இருக்க எரிபொருள் பெறுவதற்கு அரச திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள் மிகவும் சிறப்பான முறையில் கடந்த காலங்களில் செயற்பட்டாலும் எரிபொருள் பெறும் விடயத்தில் வரிசையாக நின்று எரிபொருள் பெற்றுக் கொள்ளும் நிலைக்கு ஏன் தங்களை தயார் படுத்திக் கொள்ளவில்லை என்னும் கேள்விக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்கானவர்கள் ஒழுங்காக விரிசையில் நின்று எரிபொருளைப் பெற்று முன்ணுதாரணமாக நடந்து கொண்டது அவர்களின் நியாயத் தன்மையை வெளிக்காட்டி உள்ளது. என மக்கள் கருத்துக் கூறுகின்ற நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் தொடக்கம் ஏனைய பொருட்கள் உட்பட எரிபொருள் வரையும் கையேந்தும் நிலை உருவாக்கப்பட்டு கையேந்தினாலும் கிடைக்கப் பெறாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
குறிப்பிட்ட தினங்களுக்கு எரிபொருள் சேவை இடம் பெறாது என அரசு அறிவித்துள்ளதால் மக்கள் திகைப்படைந்த நிலையில் உள்ளனர்.அடுத்த கட்டத்திற்கு என்ன செய்வதறியாது சிந்தித்த நிலையில் கிராமப் புறங்களில் வாழ்பவர்கள் விறகில் உணவுகளைச் சமைத்தாலும் நகரப்புறங்களில் வாழ்பவர்கள் உணவு சமைப்பதற்கு எவ்வித வதிகளுமின்றி ஒரு நேரம் கூட சமைக்க முடியாத நிலைமையில் பல குடும்பங்கள் வாழ்கின்றதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்த நிலைமை நீடித்தால் பல உயிர்கள் காவு கொள்ளப்படும் சிறு குழந்தைகள் போசாக்கின்றி முதியோர்கள் வரை பல சிரமத்தை எதிர் கொள்கின்றனர்.
கடந்த காலங்களில் மனித வலுக்களைக் கொண்டு செயற்பட்டாலும் இம் மாவட்ட மக்கள் மனித சக்தியுடன் பல விடயங்களில் செயற்பட்டு இன்று புதிய தொழில் நுட்பம், அபிவிருத்தி ஏனைய நாடுகளுக்கு சமனான வாழ்கை முறை இப்படி பல முறைகளை கையாண்டு செயற்படுமளவிற்கு அரசு கடந்த காலங்களில் வழிவகுத்து திறந்த வெளிப் பொருளாதாரக் கொள்கை,பன்மைத்துவம், ஜனநாயகம்,மனிதாபிமானம், மனித உரிமை விடயம் மனித சக்திக்கு அப்பால் இயந்திரங்களின் செயற்பாடுகள் பல்தேசிய நிறுவனங்கள்,கடன் வழங்கும் அமைப்புக்கள், அதிக வட்டியைப் பெறும் நிறுவனங்கள் இப்படி பல செயற்பாடுகள் காரணமாக மக்களை கடனாளிகளாக்கி தவறான அரசியற்தலைமைகள் இன்று மக்களை நடுத்தெருவில் விட்டுள்ளது.
கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கில் மௌனமான பொரளாதாரத் தடைகள் இருந்தாலும் வளங்களைக் கொண்டு செழிப்பாக வாழ்ந்த வரலாறுகளும் உண்டு. எதிர்வரும் காலங்களில் நாம் எதிர் நோக்கும் சவாலை முறியடித்து முன்னேற்றகரமாக செல்வதற்கு நாமும் எம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றேன். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)