அரசியல்வாதிக்கு சொந்தமான எரிபொருள் நிலையத்திலிருந்து மாயமாகும் எரிபொருள்

தலைமன்னார் பியரில் அரசியல் தலைவருக்கு உரிமையான எரிபொருள் நிலையத்துக்கு வரும் மண்ணெணெய் வந்தவுடன் இரவோடு இரவாக மாயமாக மறைவதாக எரிபொருள் நிலையத்துக்கு முன்பாக மக்கள் ஆர்பாட்டம். பொலிசிலும் முறையீடு செய்துள்ளனர்.

தலைமன்னார் பியரில் அமைந்துள்ள அரசாங்க பாராளுமன்ற உறுப்பினருக்கு சொந்தமான எரிபொருள் நிலையத்துக்கு வருகின்ற மண்ணெணெய் எப்பொழுதும் இரவோடு இரவாக மாயமாக மறைந்து விடுகின்றதாம் என இங்கு சென்று திரும்பும் பாதிப்படையும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வியாழக்கிழமை (16.06.2022) இரவு குறிப்பிட்ட எரிபொருள் நிலையத்துக்கு மண்ணெணெய் வந்துள்ளதாக அறிந்து இவ்வூர் மக்கள் மாத்திரம் அல்ல, சுமார் 13 கிலோ மீற்றர் தூரமுள்ள மக்கள் தங்களுக்கு பிரதேச செயலகப் பிரிவினால் வழங்கப்பட்டுள்ள மஞ்சள் அட்டைகளையும் எடுத்துச் சென்று நீண்ட வரிசையில் அதிகாலை தொடக்கம் காவல் நின்றுள்ளனர்.

முதல் 500 பேருக்கு ரூபா 400 வீதம் மண்ணெணெய் வழங்குவதற்கான டோக்கன் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் சுமார் 300 பேருடன் இங்கு மண்ணெணெய் தீர்ந்துவிட்டது என ஏனையோரை திரும்பி செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதனால், அங்கு நின்ற மக்கள் எரிபொருள் நிலைய முகாமைiயாளருடன் தர்க்கப்பட்டதுடன் பெரும் குழப்ப நிலையும் ஏற்பட்டது.

இவ்விடத்துக்கு விரைந்து வந்த பாதுகாப்பு படையினர் முகாமையாளரை பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். அதேவேளையில் பொது மக்களும் பொலிஸ் நிலையம் சென்று முறையீடு செய்துள்ளனர்.

இவ்வாறு எரிபொருள் வரும்பொழுது இரவோடு இரவாக ஏற்றிச் செல்வதை தடைசெய்ய வேண்டும் எனவும், பிரதேச செயலகம் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் இதற்கான அட்டைகள் விநியோகம் செய்திருப்பதால் ஒவ்வொரு கிராம பகுதிகளுக்கும் எவ்வளவு மண்ணெணெய் தேவைப்படும் என்பது தெரிந்து இவற்றை ஏன் அரச அதிகாரிகள் கவனம் செலுத்தாது இருக்கின்றனர் என்ற கேள்விகளை எழுப்பியதுடன், மன்னார் மாவட்ட அரச அதிகாரிகள் வெறுமனே நகர புறத்தை மாத்திரம் நோக்காது கிராமபுறங்களையும் உற்று நோக்க வேண்டும் எனவும், இவ்வெரிபொருள் நிலையத்தை நம்பி தலைமன்னார் பியர், தலைமன்னார் மேற்கு, கட்டுக்காரன் குடியிருப்பு, பாவிலுபட்டான் குடியிருப்பு, கீழியன் குடியிருப்பு, துள்ளுக்குடியிருப்பு, நடுக்குடா, பேசாலை ஆகிய கிராம மக்கள் நீண்ட தூரங்களிலிருந்து இவ்வெரிபொருள் நிலையத்துக்குச் சென்று பல முறை ஏமாற்றுடன் திரும்புவதை அரச அதிகாரிகள் கவனத்துக்கு எடுத்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தங்கள் கோரிக்கையை முன்வைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

அரசியல்வாதிக்கு சொந்தமான எரிபொருள் நிலையத்திலிருந்து மாயமாகும் எரிபொருள்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY