52 ஆவது காலாட்படை வழங்கும் உலர் உணவுப் பொதிகள்

கொடிகாமம் 52 ஆவது காலாட்படை தலைமையகத்தின் ஒருங்கமைப்பின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய 50 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு 52 ஆவது கஜபா காலாட் படையணி தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைகளின் பாதுகாப்பு தலைமையகத்தின் மேஜர் ஜெனரல் செனத் யாப்பா கலந்து கொண்டு உலர் உணவுப் பொதிகளை வழங்கினார்.

ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் 50 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.

52 ஆவது காலாட்படை வழங்கும் உலர் உணவுப் பொதிகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)